ஏழாவது புரோ கபடி லீக் தொடரில், லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்று (அக்.14) முதல் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. அதன்படி ஒவ்வொரு அணியும் 22 ஆட்டங்களில் விளையாடின. மொத்தம் 132 ‘லீக்’ ஆட்டங்கள் நடைபெற்றன.
Advertisment
இதன் முடிவில் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ், உ.பி. யோத்தா, யு.மும்பா, ஹரியானா ஸ்டீலர்ஸ், பெங்களூர் புல்ஸ் ஆகிய அணிகள் முதல் 6 இடங்களை பிடித்து பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ், புனேரி பால்டன், தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகள் முறையே 7 முதல் 12-வது இடங்களை பிடித்து வெளியேறின.
முதல் 2 இடங்களை பிடித்த டெல்லி, பெங்கால் அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடும். மற்ற 4 அணிகளும் எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடும்.
Advertisment
Advertisements
Pro Kabaddi Eliminator
நேற்று (14/10/2019) இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற முதல் எலிமினேட்டர் ஆட்டத்தில், 3-வது இடத்தை பிடித்த உ.பி.யோத்தாவும்- 6-வது இடத்தை பிடித்த பெங்களூர் அணியும் மோதின. இதில் வெற்றிப் பெறும் அணி அரை இறுதியில் டெல்லியை சந்திக்கும். தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும் என்ற நிலையில் 48-45 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸ் நேற்றையை ஆட்டத்தில் வெற்றியைப் பெற்றது. இந்த அணி நாளை (16/10/2019) டெல்லி அணியை எதிர் கொள்கிறது.
உ.பி. யோத்தாவுக்கும் பெங்களூரு புல்ஸுக்கும் இடையே நடைபெற்ற போட்டியின் போது
இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது எலிமினேட்டர் ஆட்டத்தில் 4-வது இடத்தை பிடித்த யு மும்பாவும், 5ம் இடம் பிடித்த ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின. யு மும்பா அணி 46 புள்ளிகளையும் ஹரியானா ஸ்டீலர்ஸ் 38 புள்ளிகளையும் பெற்றது. இதன் மூலம் யு மும்பா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரை இறுதியில் பெங்கால் வாரியார்ஸுடன் விளையாட உள்ளது.
அரைஇறுதி ஆட்டங்கள் 16-ம் தேதியும், இறுதிப் போட்டி 19-ம் தேதியும் நடைபெறும்.
இத்தொடரில், சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடி பரிசாக கிடைக்கும். இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ.1.8 கோடியும், 3-வது, 4-வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.90 லட்சமும், 5-வது, 6-வது இடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ.45 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மேலும், தனிநபர் சிறப்பு பரிசுகளும் அளிக்கப்பட உள்ளது.