Pro Kabaddi League 2019 Semi-final Live Streaming: இரண்டு அரையிறுதி - இருந்த இடத்தில் உங்கள் மொபைல் மூலம் பார்ப்பது எப்படி?
Pro Kabaddi League 2019 Semi-final When and Where to Watch: புரோ கபடி லீக் தொடரில் 2015-ம் ஆண்டு சாம்பியனான மும்பை அணி பெங்கால் வாரியர்ஸுக்கு செமத்தியான ரிப்ளை கொடுத்து, 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் முனைப்பில் உள்ளது
Pro Kabaddi League 2019 Semi-final When and Where to Watch: புரோ கபடி லீக் தொடரில் 2015-ம் ஆண்டு சாம்பியனான மும்பை அணி பெங்கால் வாரியர்ஸுக்கு செமத்தியான ரிப்ளை கொடுத்து, 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் முனைப்பில் உள்ளது
Pro Kabaddi League 2019 Playoffs Semi-final Live Streaming When and Where to Watch - Pro Kabaddi League 2019 Playoffs Semi-final Live Streaming: இரண்டு அரையிறுதி போட்டிகள் - உங்கள் மொபைல் மூலம் பார்ப்பது எப்படி?
Pro Kabaddi League 2019 Semi-final When and Where to Watch: புரோ கபடி லீக் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியும், பெங்களூரு புல்ஸ் அணியும் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியும், யு மும்பா அணியும் களம் காண்கின்றன.
Advertisment
புரோ கபடி லீக் 2019 தொடரில், 'எலிமினேட்டர் 1' ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் 48-45 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோதாவையும், 'எலிமினேட்டர் 2' ஆட்டத்தில் மும்பை அணி 46-38 என்ற கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸையும் தோற்கடித்தன.
இந்நிலையில், இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் அரைஇறுதியில் தபாங் டெல்லி- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.
Advertisment
Advertisements
இந்த சீசனில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அரைஇறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றது. ஜோகிந்தர் நர்வால் தலைமையிலான அந்த அணி 15 வெற்றி, 4 தோல்வி, 3 டிரா என மொத்தம் 85 புள்ளிகள் பெற்றது.
லீக் சுற்றில், இவ்விரு அணிகளும் மோதிய 2 ஆட்டத்தில், டெல்லி ஒரு முறை வெற்றி பெற, மற்றொரு ஆட்டம் டிரா ஆனது. அதே சமயம், நடப்பு சாம்பியனான பெங்களூர் அணி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைவதில் முனைப்பாக உள்ளது.
அந்த அணியில் நட்சத்திர வீரராக பவன்குமார் ஷெரவாத் வலம் வருகிறார். அணியில் மட்டுமல்ல, நடப்பு தொடரின் சூப்பர் ஸ்டார் பவன்குமார் தான். அவர் 321 ரெய்டு புள்ளிகள் உள்பட மொத்தம் 335 பாயிண்டுகள் பெற்றுள்ளார்.
Pro Kabaddi League 2019 Semi-final 2 Live Streaming
இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதியில் மனீந்தர் சிங் தலைமையிலான பெங்கால் வாரியர்ஸ் - ஃபசல் அட்ரசலி தலைமையிலான யு மும்பா அணிகள் மோதுகின்றன.
இத்தொடரில் பெங்கால் வாரியர்ஸ் 2 முறையும் மும்பையை வீழ்த்தி இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பெங்கால் வாரியர்ஸ் அணியில் ஆடும் தமிழக வீரர் பிரபஞ்சன் 101 புள்ளிகள் குவித்திருக்கிறார்.
அதேசமயம், 2015-ம் ஆண்டு சாம்பியனான மும்பை அணி பெங்கால் வாரியர்ஸுக்கு செமத்தியான ரிப்ளை கொடுத்து, 4-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் முனைப்பில் உள்ளது.
இவ்விரு போட்டிகளுமே, அகமதாபாத்தில் உள்ள EKA ARENA BY TRANSSTADIA அரங்கத்தில் நடைபெற உள்ளன.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD சேனல்களில் போட்டியை நேரடியாக காணலாம். தவிர, ஹாட்ஸ்டாரில் லைவாக இவ்விரு போட்டிகளையும் கண்டு ரசிக்கலாம்.