புரோ கபடி லீக் சீசன் 7, வரும் ஜூலை 19-ம் தேதி முதல் அக்டோபர் 9-ம் தேதி வரை இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடக்கிறது. இதற்கான ஏலம் நடந்து முடிந்திருக்கிறது.
ஏலப்பட்டியலில் 53 வெளிநாட்டு வீரர்களும், 388 இந்திய வீரர்களும் இடம் பெற்று இருந்தனர். கடந்த ஆண்டில் மும்பை அணியில் இடம் பெற்றிருந்த மராட்டியத்தை சேர்ந்த சித்தார்த் தேசாய் முதல் நாளில் அதிகபட்சமாக ரூ.1 கோடியே 45 லட்சத்துக்கு தெலுங்கு டைட்டன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இரண்டாம் மற்றும் கடைசி நாளான நேற்று நடந்த ஏலத்தில் ‘டேக்கிள்’ செய்வதில் சிறந்தவரான நீரஜ் குமார் அதிக விலைக்கு போனார். அவரை வாங்க பெங்கால், குஜராத், அரியானா, பாட்னா, தமிழ் தலைவாஸ் அணிகள் கடும் போட்டி போட்டன. இறுதியில் அவரை ரூ.44.75 லட்சத்துக்கு பாட்னா பைரட்ஸ் அணி வாங்கியது.
விகாஸ் காலே (அரியானா) ரூ.34.25 லட்சத்துக்கும், நவீன் (அரியானா) ரூ.33.5 லட்சத்துக்கும், அஜித் (தமிழ் தலைவாஸ்) ரூ.32 லட்சத்துக்கும் ஏலம் போனார்கள். தமிழகத்தை சேர்ந்த கே.செல்வமணி ரூ.16.05 லட்சத்துக்கு அரியானா ஸ்டீலர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதேபோல் மற்றொரு தமிழக வீரர் சி.அருணை ரூ.10 லட்சத்துக்கு தெலுங்கு டைட்டன்ஸ் அணி சொந்தமாக்கியது
12 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் மொத்தம் 29 வீரர்கள் ஏற்கனவே தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டனும், 'ரெய்ட் மெஷின்' என்று அழைக்கப்படும் ராகுல் சௌத்ரியை தமிழ் தலைவாஸ் அணி வாங்கியிருக்கிறது. இது தவிர, 2019 சீசனில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்களின் முழு லிஸ்ட் இதோ...
தமிழ் தலைவாஸ்
தக்க வைக்கப்பட்ட எலைட் வீரர்கள் - அஜய் தாக்கூர், மன்ஜீத் சில்லர், விக்டர் ஒயாங்கோ ஒபீரோ
இளம் வீரர்கள் - ஹிமான்ஷு, எம்.அபிஷேக்
ராகுல் சௌத்ரி - ரூ.94 லட்சம்
ரான்சிங் - ரூ.55 லட்சம்
மொஹித் சில்லார் - ரூ.45 லட்சம்
அஜீத் - ரூ.32 லட்சம்
மிலாத் ஷெய்பக் - ரூ.10 லட்சம்
ஷபீர் பாபு - ரூ.10 லட்சம்
யஷ்வந்த் பிஷ்னோய் - ரூ.10 லட்சம்
வினீத் ஷர்மா - ரூ.10 லட்சம்
என தமிழ் தலைவாஸ் அணிக்காக வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.