scorecardresearch

தமிழ் தலைவாஸ் அணியின் கடைசி மூச்சு – எல்லாம் போச்சு!

அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைக்க வேண்டுமெனில், தமிழ் தலைவாஸ் இன்று வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது

pro kabaddi league 2019 tamil thalaivas vs haryana steelers - தமிழ் தலைவாஸ் அணியின் கடைசி மூச்சு - விட்டால் போச்சு!
pro kabaddi league 2019 tamil thalaivas vs haryana steelers – தமிழ் தலைவாஸ் அணியின் கடைசி மூச்சு – விட்டால் போச்சு!

Tamil Thalaivas vs Haryana Steelers: புரோ கபடி தொடரில் தொடரில், இன்டர்வெல்லோடு அல்மோஸ்ட் எக்ஸிட் கேட் அருகே சென்று ஏங்கிக் கொண்டிருக்கும் தமிழ் தலைவாஸ் அணி, இன்று மெயின் ஸ்க்ரீனில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கும் வலுவான ஹரியானா ஸ்டீலரை எதிர்கொண்டது.

நடைபெறும் 7வது புரோ கபடி சீசனில், வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ், அடுத்து 2 தோல்வி, தொடர்ந்து ஒரு வெற்றி, ஒரு சமன், ஒரு வெற்றி என நம்பிக்கை அளிக்கும் விதமாகவே ஆடிக் கொண்டிருந்தது. ஆனால், அதன் பிறகு தொடர்ந்து தோல்வி என்ற மந்திரத்தை மட்டுமே தலைவாஸ் உச்சரித்துக் கொண்டிருக்கிறது.

தோல்விகளின் டால்பி எஃபெக்ட் எக்கோவால் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் எடச்சேரி பாஸ்கரன் பதவி விலக, ஜே.உதயகுமார் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு நடந்த 2 போட்டியிலும் தலைவாஸ் அணிக்கு வழக்கம் போல் தோல்வியே ரிசல்ட். இதுவரை 15 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 சமன், 10 தோல்விகளுடன் 27 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

தமிழ் தலைவாஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ்

இந்நிலையில் புனேவில் இன்று நடைபெறும் போட்டியில் ஹரியானா ஸ்டீலரை எதிர்கொள்கிறது தமிழ் தலைவாஸ். இந்த தொடரில் ஏற்கனவே அந்த அணியை வீழ்த்தி உற்சாகத்துடன் இன்று தலைவாஸ் களம் காணும். ஆனால், ஹரியானா இப்போது வலுவான நிலையில் இருக்கிறது. தமிழக வீரர் தர்மராஜ் சேரலாதன் தலைமையிலான ஹரியானா இதுவரை 14 போட்டிகளில் விளையாடி ஒரு சமன், 4 தோல்வி, 9 வெற்றிகளுடன் 49 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. அதிலும் கடந்த 6 போட்டிகளில் ஒரு தோல்வியை விட சந்திக்கவில்லை.

அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைக்க வேண்டுமெனில், தமிழ் தலைவாஸ் இன்று வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது.

இந்நிலையில், 35-43 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Pro kabaddi league 2019 tamil thalaivas vs haryana steelers