புரோ கபடி லீக் 2019: தமிழ் தலைவாஸுக்கு கடைசி நேரத்தில் கிடைத்த ஆறுதல் வெற்றி

புரோ கபடி லீக் 2019 தொடரில், தமிழ் தலைவாஸ் அணி நேற்று நடந்த ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் எதிரான போட்டியில் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. ஷாஹித் விஜய் சிங் பதி விளையாட்டு அரங்கில், நேற்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி 35 புள்ளிகளும், ஜெய்ப்பூர் அணி 33 புள்ளிகளும் எடுத்தன. இருந்தாலும் புரோ கபடி லீக் தொடரில், தமிழ் தலைவாஸ் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தான் உள்ளது […]

Tamil Thalaivas wins against jaipur pink panthers
Tamil Thalaivas wins against jaipur pink panthers

புரோ கபடி லீக் 2019 தொடரில், தமிழ் தலைவாஸ் அணி நேற்று நடந்த ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் எதிரான போட்டியில் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.

ஷாஹித் விஜய் சிங் பதி விளையாட்டு அரங்கில், நேற்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி 35 புள்ளிகளும், ஜெய்ப்பூர் அணி 33 புள்ளிகளும் எடுத்தன.

இருந்தாலும் புரோ கபடி லீக் தொடரில், தமிழ் தலைவாஸ் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தான் உள்ளது . முதல் அணியாகவும் நடப்பு தொடரை விட்டு வெளியேறியது. தவிர, தெலுகு டைட்டன்ஸ், குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ், புனேரி பால்டன்ஸ், பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் ஆகிய அணிகள் தொடரை விட்டு வெளியேறிவிட்டன.

அதேசமயம், டெல்லி தபாங், பெங்கால் வாரியர்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், யு.பி.யோத்தா, யு மும்பா, பெங்களூரு புல்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இதுவரை 21 போட்டிகளில் 14 தோல்விகள், 4 வெற்றி, 3 டிரா என மொத்தம் 31 புள்ளிகள் மட்டுமே தமிழ் தலைவாஸ் அணி  பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pro kabaddi league 2019 tamil thalaivas vs jaipur pink panthers

Next Story
முகமது ஷமி – இரண்டாம் இன்னிங்ஸில் எதிரணியை சீர்குலைக்கும் ஓர் பந்துmohammed shami ind vs sa 1st test cricket shami wickets - முகமது ஷமி - இரண்டாம் இன்னிங்ஸில் எதிரணியை சீர்குலைக்கும் ஓர் பந்து
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com