/tamil-ie/media/media_files/uploads/2019/09/z1938.jpg)
pro kabaddi league 2019 tamil thalaivas vs patna pirates when and where to watch - வாழ்வா, சாவா ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தமிழ் மண்ணுக்குனு ஒரு கெத்து இருக்கு பாஸ்!
Tamil Thalaivas vs Patna Pirates: தமிழ் தலைவாஸின் 'ஆட்டம்' 7வது சீசனில் முடிவுக்கு வந்துவிடும் போலிருக்கிறது.
புரோ கபடி லீக் தொடரின் 7வது சீசன் பாதி கிணற்றை தாண்டிவிட்டது. ஒவ்வொரு அணியும் இதுவரை 13 - 15 ஆட்டங்களில் ஆடிவிட்டன. 14 ஆட்டங்களில் ஆடியுள்ள தபாங் டெல்லி கே.சி. அணி 11 வெற்றிகளுடன் 59 புள்ளிகள் குவித்து, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
ஆனால், தமிழ் தலைவாஸ் அணி 14 ஆட்டங்களில் விளையாடி 3ல் மட்டுமே வெற்றிப் பெற்று, 27 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி இன்னும் 8 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதில் 7ல் வெற்றி பெறும் பட்சத்தில் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு செல்லலாம். ஆனால், தமிழ் தலைவாஸ் ஆட்டத்தினை பார்த்தால், இவ்வளவு பெரிய கம்பேக் கொடுக்க முடியுமா? என்பது சந்தேகமே.
இந்நிலையில், பாட்னா பைரேட்ஸ் அணியுடன், தமிழ் தலைவாஸ் இன்று மோதியது. பாட்னாவில் உள்ள பாட்லிபுத்ரா விளையாட்டு அரங்கில், இன்று இரவு 8.30 மணிக்கு இப்போட்டி தொடங்கியது. இதில், 51-25 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் படுதோல்வி அடைந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.