தமிழ் தலைவாஸ்- புனேரி பல்தான் ஆட்டம் டையில் முடிந்தது

புனே ஸ்ரீ ஷிவ் சத்ரபதி விளையாட்டு அரங்கத்தில், இன்றிரவு 8.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், புனேரி பால்டன் அணியை தமிழ் தலைவாஸ் எதிர்கொள்கிறது

By: Updated: September 18, 2019, 09:57:54 PM

Tamil Thalaivas vs Puneri Paltan: புரோ கபடி 2019 தொடரில், கடைசி இடத்தில் இருக்கும் தமிழ் தலைவாஸ் அணியும் புனேரி பல்தான் அணியும் இன்று மோதியது. இந்த போட்டியில் இரு அணிகளும் சமமான புள்ளிகளைப் பெற்றதால் வெற்றி தோல்வியின்றி டையில் முடிந்தது.

7வது புரோ கபடி சீசனில், வெற்றியுடன் தொடங்கிய தமிழ் தலைவாஸ், அடுத்து 2 தோல்வி, தொடர்ந்து ஒரு வெற்றி, ஒரு சமன், ஒரு வெற்றி என நம்பிக்கை அளிக்கும் விதமாகவே ஆடிக் கொண்டிருந்தது. ஆனால், அதன் பிறகு தொடர்ந்து வரிசையாக எட்டு தோல்விகளை சந்தித்திருக்கிறது.

இதுவரை 16 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 சமன், 11 தோல்விகளுடன் 27 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

தமிழ் தலைவாஸ் vs புனேரி பால்டன்

இந்நிலையில் புனே ஸ்ரீ ஷிவ் சத்ரபதி விளையாட்டு அரங்கத்தில், இன்று புனேரி பல்தான் – தமிழ் தலைவாஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இரு அணிகளும் 36க்கு 36 என்ற புள்ளிகள் கணக்கில் சம அளவில் புள்ளிகளைப் பெற்றதால் போட்டி வெற்றி தோல்வியின்றி டையில் முடிந்தது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Pro kabaddi league 2019 tamil thalaivas vs puneri paltan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X