pro-kabaddi-league: 10-வது புரோ கபடி லீக் (பி.கே.எல்) தொடர் இன்று (டிசம்பர் 2ம் தேதி) முதல் தொடங்குகிறது. 12 அணிகள் களமாடும் இந்த தொடரில் இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ள தொடரின் முதலாவது ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள 2-வது ஆட்டத்தில் யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் அணிகள் விளையாட உள்ளன.
புரோ கபடி லீக் 2023: அட்டவணை
புரோ கபடி லீக் 2023 தொடருக்கான அட்டவணையை இங்கு பார்க்கலாம்.
2-7 டிசம்பர் 2023: அகமதாபாத்
8-13 டிசம்பர் 2023: பெங்களூரு
15-20 டிசம்பர் 2023: புனே
22-27 டிசம்பர் 2023: சென்னை
29 டிசம்பர் 2023 - 3 ஜனவரி 2024: நொய்டா
5-10 ஜனவரி 2024: மும்பை
2-17 ஜனவரி 2024: ஜெய்ப்பூர்
19-24 ஜனவரி 2024: ஹைதராபாத்
26-31 ஜனவரி 2024: பாட்னா
2-7 பிப்ரவரி 2024: டெல்லி
9-14 பிப்ரவரி 2024: கொல்கத்தா
16-21 பிப்ரவரி 2024: பஞ்ச்குலா
புரோ கபடி லீக் 2023: பிகேஎல் அணிகள்
1. பெங்கால் வாரியர்ஸ்
2. பெங்களூரு புல்ஸ்
3. தபாங் டெல்லி கே.சி
4. குஜராத் ஜெயண்ட்ஸ்
5. ஹரியானா ஸ்டீலர்ஸ்
6. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
7. பாட்னா பைரேட்ஸ்
8. புனேரி பல்டன்
9. தமிழ் தலைவாஸ்
10. தெலுங்கு டைட்டன்ஸ்
11. யு மும்பா
12. உ.பி யோதாஸ்
புரோ கபடி லீக் 2023: லைவ் ஸ்ட்ரீமிங் - டெலிகாஸ்ட்
புரோ கபடி லீக் 2023 தொடரின் அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
ஆன்லைனியில் போட்டியின் நேரலை ஒளிபரப்பு டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் (Disney+Hotstar) மொபைல் ஆப் மற்றும் இணையதளத்தில் பார்க்கலாம்.
புரோ கபடி லீக் 2023: இடங்கள்
புரோ கபடி லீக் 2023 பத்து மைதானங்களில் நடத்தப்படும். இடங்களின் பட்டியல் இங்கு பார்க்கலாம்.
டிரான்ஸ்ஸ்டேடியா அரங்கம், அகமதாபாத்
ஸ்ரீ கண்டீரவா உள்விளையாட்டு அரங்கம், பெங்களூரு
பாலேவாடி விளையாட்டு அரங்கம், புனே
எஸ்.டி.ஏ.டி (SDAT) பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், சென்னை
நொய்டா உள்விளையாட்டு அரங்கம், நொய்டா
என்.எஸ்.சி.ஐ (NSCI) மும்பை
எஸ்எம்எஸ் உள்விளையாட்டு அரங்கம், ஜெய்ப்பூர்
கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கம், ஹைதராபாத்
பாட்லிபுத்ரா உள்விளையாட்டு அரங்கம், பாட்னா
தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கம், டெல்லி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“