Advertisment

Tamil Thalaivas Matches Schedule: தமிழ் தலைவாஸ் முதல் போட்டியில் டெல்லியுடன் மோதல்; இந்த முறை கோப்பை கிடைக்குமா?

புரோ கபடி தொடருக்கான தமிழ் தலைவாஸ் அணி அதன் தொடக்க ஆட்டத்தில் தபாங் டெல்லி கே.சி. அணியை அகமதாபாத்தில் வருகிற டிசம்பர் 3ம் தேதி எதிர்கொள்கிறது.

author-image
WebDesk
New Update
Pro Kabaddi League 2023 Tamil Thalaivas Match Schedule  Fixtures Full List Venues Date And Time For PKL 10 in tamil

தமிழ் தலைவாஸ் புரோ கபடி லீக் (பிகேஎல்) 2023க்கான முழுமையான அட்டவணை

Pro-kabaddi-league | tamil-thalaivas: 10-வது புரோ கபடி லீக் (பி.கே.எல்) தொடர் இன்று (டிசம்பர் 2ம் தேதி) முதல் தொடங்குகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய 12 அணிகள் கலந்து கொள்கின்றன.

Advertisment

இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ள தொடரின் முதலாவது ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள 2-வது ஆட்டத்தில் யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் அணிகள் விளையாட உள்ளன.

புரோ கபடி தொடருக்கான தமிழ் தலைவாஸ் அணி அதன் தொடக்க ஆட்டத்தில் தபாங் டெல்லி கே.சி. அணியை அகமதாபாத்தில் வருகிற டிசம்பர் 3ம் தேதி எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்காக தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் பயிற்சியாளர் அஷான் குமார் தலைமையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

தமிழகத்தின் சென்னையை தளமாகக் கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 5வது பி.கே.எல் தொடரில் அறிமுகமானது. அந்த சீசனில் பலத்த பின்னடைவை சந்தித்து இருந்தனர். அதன்பிறகு நடந்த நடந்த 3 சீசன்களிலும் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை தான் தலைவாஸ் அணி பிடித்தது.

ஆனால், கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட அணி, பயிற்சியாளர் அஷன் குமாரின் தலைமையில் முதன்முறையாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. இருப்பினும், அரையிறுதியில் போராடி தோல்வியுற்றது. இந்த முறை கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அணியின் புதிய கேப்டனாக சாகர் ரதி நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழ் தலைவாஸ் புரோ கபடி லீக் (பிகேஎல்) 2023க்கான முழுமையான அட்டவணை

டிசம்பர் 3: தமிழ் தலைவாஸ் vs தபாங் டெல்லி கே.சி  – அகமதாபாத்.

டிசம்பர் 10: பெங்கால் வாரியர்ஸ் vs தமிழ் தலைவாஸ் - பெங்களூரு.

டிசம்பர் 13: தமிழ் தலைவாஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ் –  பெங்களூரு.

டிசம்பர் 17: யு மும்பா vs தமிழ் தலைவாஸ் - 

டிசம்பர் 22: தமிழ் தலைவாஸ் vs பாட்னா பைரேட்ஸ் – சென்னை.

டிசம்பர் 23: தமிழ் தலைவாஸ் vs ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – சென்னை.

டிசம்பர் 25: தமிழ் தலைவாஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ் –  சென்னை.

டிசம்பர் 27: தமிழ் தலைவாஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் – சென்னை.

டிசம்பர் 31: தமிழ் தலைவாஸ் vs பெங்களூரு புல்ஸ் - நொய்டா.

ஜனவரி 7: புனேரி பல்டன் vs தமிழ் தலைவாஸ் – மும்பை.

ஜனவரி 10: உ.பி யோதாஸ் vs தமிழ் தலைவாஸ் – மும்பை.

ஜனவரி 14: ஹரியானா ஸ்டீலர்ஸ் vs தமிழ் தலைவாஸ் – ஜெய்ப்பூர்.

ஜனவரி 16: பாட்னா பைரேட்ஸ் vs தமிழ் தலைவாஸ் –  ஜெய்ப்பூர்.

ஜனவரி 21: பெங்களூரு புல்ஸ் vs தமிழ் தலைவாஸ் - ஐதராபாத்.

ஜனவரி 24: தெலுங்கு டைட்டன்ஸ் vs தமிழ் தலைவாஸ் – ஐதராபாத்.

ஜனவரி 28: தமிழ் தலைவாஸ் vs யு மும்பா - பாட்னா.

ஜனவரி 31: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs தமிழ் தலைவாஸ் -  பாட்னா.

பிப்ரவரி 4: குஜராத் ஜெயண்ட்ஸ் vs தமிழ் தலைவாஸ் – டெல்லி.

பிப்ரவரி 6: தமிழ் தலைவாஸ் vs உ.பி யோதாஸ் டெல்லி.

பிப்ரவரி 11: தமிழ் தலைவாஸ் vs புனேரி பல்டன் - கொல்கத்தா.

பிப்ரவரி 14: தபாங் டெல்லி கே.சி  vs தமிழ் தலைவாஸ் - கொல்கத்தா.

பிப்ரவரி 18: தமிழ் தலைவாஸ் vs பெங்கால் வாரியர்ஸ் – பஞ்ச்குலா.

புரோ கபடி லீக் (பி.கே.எல்) 2023 சீசன் 10க்கான தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் பட்டியல்  

அஜிங்க்யா பவார், நரேந்தர், செல்வமணி கே, விஷால் சாஹல், ஹிமான்ஷு நர்வால், ஹிமான்ஷு சிங், நிதின் சிங், ஜதின், சதீஷ் கண்ணன், மாசானமுத்து லக்ஷனன், எம் அபிஷேக், ஹிமான்ஷு, சாகர், ஆஷிஷ், மோஹித், சாஹில் குலியா, அமீர்ஹோசைன் பஸ்தாமி, ரோன், முகமதுரேசா கபௌத்ரஹங்கி, மற்றும் ரித்திக். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Thalaivas Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment