புரோ கபடி லீக் தொடரில் இன்று நடைபெற உள்ள 41-வது லீக் ஆட்டத்தில் சாஹில் குலியா தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 10-வது சீசன் கடந்த டிசம்பர் 2-ந் தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இன்று (டிசம்பர் 25) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டி இன்று இரவு 9 மணிக்கு தொடங்கியது.
ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி 42-29 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவியது. தமிழ் தலைவாஸ் அணி தரப்பில், சுஹில் சிங் 10 புள்ளிகளும், ஹிம்மன்ஷூ 9 புள்ளிகளும், எடுத்தனர். ஹரியான ஸ்டீலர்ஸ் அணி தரப்பில், சிவம் பட்டரே 8 புள்ளிகளும், ஜெய்தீப், சேத்பால் ஆகியோர் தலா 7 புள்ளிகளும் பெற்றனர்.
இந்த தோல்வியின் மூலம் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 2 வெற்றி 5 தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 11-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் 38-29 என்ற புள்ளிக்கணக்கில் தபாங் டெல்லி அணி பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. பெங்கால் வாரியர்ஸ் 22 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், தபாங் டெல்லி 17 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் உள்ளது.
தமிழ் தலைவாஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ்
நேற்று முன்தினம் (டிசம்பர் 23) நடைபெற்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 1 புள்ளி (24-25) வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து. இதன் மூலம் நடப்பு தொடரில் 6 போட்டிகளில் 4-வது தோல்வியை சந்தித்துள்ள தமிழ் தலைவாஸ் அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இன்று களமிறங்க உள்ளது.
அதேபோல் கடந்த டிசம்பர் 22 அன்று நடைபெற்ற தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 1 புள்ளி (36-37) வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குவதால் இந்த போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கு என்று எதிர்பார்க்கலாம்.
தமிழ் தலைவாஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் இதுவரை மோதல்
புரோ கபடி லீக் வரலாற்றில் தமிழ் தலைவாஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இதுவரை 9 முறை மோதியுள்ளது. இதில் 4 முறை ஹரியானா அணியும், 2 முறை தமிழ் தலைவாஸ் அணியும் வெற்றி பெற்றுள்ள நிலையில், 3 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற சீசனில், 61-38 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 2 வெற்றி 4 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 11-வது இடத்தில் உளள்து. அதே சமயம் ஹரியானா அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வியுடன், 21 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.
தமிழ் தலைவாஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ் முன்னணி வீரர்கள்
தமிழ் தலைவாஸ்
இந்த சீசனில் 6 போட்டிகளில் 45 ரெய்டு புள்ளிகளை குவித்த அஜிங்க்யா பவார் தமிழ் தலைவாஸ் அணியின் முக்கிய ரெய்டராக உள்ளார். அவர் முந்தைய ஆட்டத்தில் 2 புள்ளிகள் மட்டுமே எடுத்திருந்தார். அதே போல் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் சாஹில் குலியா 6 ஆட்டங்களில் 20 தடுப்பாட்டப் புள்ளிகளை பெற்றுள்ளார். இதில் 13 புள்ளிகள் பெற்றுள்ள ஹிமான்ஷு அணியில் முதல் ஆல்ரவுண்டராக உள்ளார்.
ஹரியானா ஸ்டீலர்ஸ்
ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியில் வினய் 6 போட்டிகளில் 50 ரெய்டு புள்ளிகளைக் குவித்துள்ளார். மோஹித் நந்தல் தற்காப்பு பிரிவில் முன்னணி வீரராக இருக்கிறார். இவர், 6 போட்டிகளில் 18 தடுப்பாட்ட புள்ளிகளை பெற்றுள்ளார். ஆஷிஷ் 6 போட்டிகளில் 17 புள்ளிகளுடன் அணியில் சிறந்த ஆல்ரவுண்டராக உள்ளார்.
பி.கே.எல் புள்ளிவிவரங்கள், பதிவுகள் மற்றும் சாதனைகள்
தமிழ் தலைவாஸின் அஜிங்க்யா பவார் பிகேஎல் சீசன் 10 இல் 50 ரெய்டு புள்ளிகளை எட்டுவதற்கான வரிசையில் முக்கிய இடத்தில் உள்ளார். தற்போது வரை அவர், 45 புள்ளிகளைக் பெற்றுள்ளார். தமிழ் தலைவாஸின் சாகர் தனது பிகேஎல் கேரியரில் 19வது சூப்பர் டேக்கிள்ஸில் இருக்கிறார். அவர் மேலும் ஒரு புள்ளி எடுக்கும்போது 20புள்ளி என்ற மைல்கல்லை எட்டுவார்.
ஹரியானா ஸ்டீலர்ஸின் கே பிரபஞ்சன் தனது பிகேஎல் வாழ்க்கையில் 8 சூப்பர் ரெய்டுகளில் இருக்கிறார், அவர் 10 புள்ளிகள் க்ளப்பில் இணைய இன்னும் 2 புள்ளிகள் தேவை. ஹரியானா ஸ்டீலர்ஸின் மோஹித் நந்தல் தனது பிகேஎல் வாழ்க்கையில் 8 சூப்பர் டேக்கிள்களை செய்துள்ளார். 10 புள்ளிகளை பெற அவருக்கு இன்னும் 2 மட்டுமே தேவை.
புரோ கபடி 10-வது சீசன் நேரலை
புரோ கபடி லீக் தொடரின் 10-வது சீசன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் அப்பிலும், இலவசமாக பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.