Pro Kabaddi Final 2019: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய பெங்கால் வாரியர்ஸ்
பெங்கால் வாரியர்ஸ் அணியைப் பொறுத்தவரை, கேப்டன் மணீந்தர்சிங் 205 புள்ளிகள் எடுத்துள்ளார். அவர் காயம் காரணமாக அரை இறுதியில் ஆடவில்லை. இறுதிப்போட்டியில் ஆடுவதும் சந்தேகமே
புரோ கபடி லீக் தொடர் ஏழாவது சீசனில், இன்று டெல்லி தபாங் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடந்த இறுதிப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
புரோ கபடி லீக் தொடர் 7வது சீசனில், உ.பி.யோதா, யு மும்பை, ஹரியானா ஸ்டீலர்ஸ, பெங்களூரு புல்ஸ் ஆகிய நான்கு அணிகள் முறையே 3 முதல் 6 இடங்கள் பிடித்து அரை இறுதிக்கான ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறின. பிளே ஆஃப் முதல் எலிமினேட்டர் சுற்றில் பெங்களூரு புல்ஸ் அணி உ.பி. யோத்தாவையும், 2-வது எலிமினேட்டர் சுற்றில் யு மும்பை அணி ஹரியானாவையும் தோற்கடித்தன.
இதன்மூலம் அரை இறுதிக்கு பெங்களூரு புல்ஸ், யு மும்பை தகுதி பெற்றன. முதல் அரைஇறுதியில் பெங்களூருவை தபாங் டெல்லியும், 2-வது அரைஇறுதியில் யு மும்பையை பெங்கால் வாரியர்ஸும் வீழ்த்தின.
இந்நிலையில், சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி இன்று (அக்.19) இரவு நடைபெற்றது. இதில் தபாங் டெல்லி- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
இதில், 34-39 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
பெங்கால் வாரியர்ஸ் அணியில் முகமது நபிபக்ஷ் 10 புள்ளிகளும், சுகேஷ் ஹெக்டே 8 புள்ளிகளும் எடுக்க, டெல்லி சார்பில் நவீன் குமார் மட்டும் 18 புள்ளிகள் சேர்த்தார். ஆனால், மற்ற ரெய்டர்களின் சொதப்பலால் கடைசி வரை டெல்லியால் மீள முடியவில்லை.