புரோ கபடி லீக் 7வது சீசன் க்ளைமேக்ஸ் - இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார்?
இரு அணிகளும் மோதிய ‘லீக்’ ஆட்டங்களில், ஒரு போட்டி 30-30 என்று டிராவாக, மற்றொரு போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் 42-33 என்ற புள்ளிக் கணக்கில் தபாங் டெல்லியை தோற்கடித்தது
pro kabaddi league final 2019 dabang delhi vs bengal warriors - புரோ கபடி லீக் 7வது சீசன் கிளைமேக்ஸ் - இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார்?
புரோ கபடி லீக் தொடரில், ஏழாவது சீசனில், 132 லீக் போட்டிகளின் முடிவில், புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு நேரடியாக தகுதிப் பெற்றன.
Advertisment
உ.பி.யோதா, யு மும்பை, ஹரியானா ஸ்டீலர்ஸ, பெங்களூரு புல்ஸ் ஆகிய நான்கு அணிகள் முறையே 3 முதல் 6 இடங்கள் பிடித்து அரை இறுதிக்கான ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறின. பிளே ஆஃப் முதல் எலிமினேட்டர் சுற்றில் பெங்களூரு புல்ஸ் அணி உ.பி. யோத்தாவையும், 2-வது எலிமினேட்டர் சுற்றில் யு மும்பை அணி ஹரியானாவையும் தோற்கடித்தன.
இதன்மூலம் அரை இறுதிக்கு பெங்களூரு புல்ஸ், யு மும்பை தகுதி பெற்றன. முதல் அரைஇறுதியில் பெங்களூருவை தபாங் டெல்லியும், 2-வது அரைஇறுதியில் யு மும்பையை பெங்கால் வாரியர்ஸும் வீழ்த்தின.
இந்நிலையில், சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி நாளை(அக்.19) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் தபாங் டெல்லி- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
தபாங் டெல்லி
தபாங் டெல்லியின் அணியின் கேப்டன் ஜோகிந்தர் நார்வால்.
அதிகபட்ச ரெய்டு புள்ளிகள் பெற்றவர் நவீன் குமார் - 238
அதிக டேக்கில் புள்ளிகள் வைத்திருப்பவர் ரவீந்தர் பஹல் - 62
தபாங் டெல்லி அணியின் செயல்பாடு:
பெங்கால் வாரியர்ஸ் அணியைப் பொறுத்தவரை, கேப்டன் மணீந்தர்சிங் 205 புள்ளிகள் எடுத்துள்ளார். அவர் காயம் காரணமாக அரை இறுதியில் ஆடவில்லை. இறுதிப்போட்டியில் ஆடுவதும் சந்தேகமே. சுகேஷ் ஹெக்டே, முகமது இஸ்மாயில் நபிபக்ஷா, பிரபஞ்சன், பல்தேவ்சிங் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.
பெங்கால் வாரியர்ஸ் அணியின் செயல்பாடு
இரு அணிகளும் மோதிய ‘லீக்’ ஆட்டங்களில், ஒரு போட்டி 30-30 என்று டிராவாக, மற்றொரு போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் 42-33 என்ற புள்ளிக் கணக்கில் தபாங் டெல்லியை தோற்கடித்தது.
சமபலத்துடன் உள்ள இரு அணிகள் மோதுவதால் இறுதிப்போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
நாளை(அக்.19) இரவு எட்டு மணிக்கு அகமதாபாத்தில் உள்ள EKA ARENA BY TRANSSTADIA அரங்கத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD சேனல்களில் போட்டியை நேரடியாக காணலாம். தவிர, ஹாட்ஸ்டாரில் லைவாக இவ்விரு போட்டிகளையும் கண்டு ரசிக்கலாம்.