Advertisment

புரோ கபடி சீசன் 10; ரசிகர்களுடன் கொண்டாட ரெடியா இருக்கிறேன்: பவன் ஷெராவத்

பி.கே.எல் தொடரின் நட்சத்திர வீரரான பவன் செஹ்ராவத், தான் 'பத்தாவது சீசனுக்காக மிகவும் உற்சாகமாக இருப்பதாக' கூறி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pro Kabaddi League: Pawan Sehrawat Can't Wait To Celebrate PKL Season 10 With Fans Tamil News

பவன் செஹ்ராவத் பி.கே.எல் தொடருக்கான தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் ஆவார்.

Pawan Sehrawat - Pro Kabaddi League Tamil News: 10வது புரோ கபடி லீக் (பி.கே.எல்) தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடக்கும் தேதிகளை மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், 105 பி.கே.எல் போட்டிகளில் 987 புள்ளிகளைப் பெற்றுள்ள நட்சத்திர வீரரான பவன் செஹ்ராவத், தான் 'பத்தாவது சீசனுக்காக மிகவும் உற்சாகமாக இருப்பதாக' கூறி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisment

"புரோ கபடி லீக் ஒரு அற்புதமான பயணத்தை கடந்துள்ளது. நிச்சயமாக அதன் பத்தாவது சீசன் மிக பிரமாண்டமானதாகும். அனைத்து ரசிகர்களுடனும் சீசன் 10 ஐக் கொண்டாடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்." என்று பவன் செஹ்ராவத் கூறியுள்ளார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிகேஎல்லின் தாக்கம் குறித்து பேசிய ஸ்டார் ரைடர் நவீன்,"ப்ரோ கபடி லீக் நூற்றுக்கணக்கான வீரர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. இன்று கபடி ஒரு லட்சிய வாழ்க்கையாக மாறியுள்ளது. பி.கே.எல்-தொடருக்கு நன்றி. எதிர்காலத்தில் இன்னும் பல சீசன்களை எதிர்பார்க்கிறேன்." என்று கூறியுள்ளார். நவீன் 85 பி.கே.எல் போட்டிகளில் 934 புள்ளிகளை எடுத்துள்ளார்,

கடந்த ஒன்பது சீசன்களில் கபடி விளையாட்டை வளர்ப்பதில் புரோ கபடி லீக் முக்கியப் பங்காற்றியுள்ளது, மேலும் சீசன் 10ல் போட்டியை மேலும் உயர்த்த ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த நேரத்தில் மீண்டும் ஒருமுறை ரசிகர்களை கவர வீரர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment