Advertisment

இளம் படையுடன் களமாடும் தமிழ் தலைவாஸ்… அணியின் ஆடும் செவன் எப்படி இருக்கும்?

Depth analysis of the Tamil Thalaivas squad for the Pro Kabaddi Season 9 Tamil News: முந்தைய சீசனிஸ் தமிழ் தலைவாஸ் அணியின் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். குறிப்பாக மோஹித் ஜாகர் மற்றும் சாஹில் குலியா போன்றவர்கள் முதல் செவனில் முக்கிய பங்கு வகித்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pro Kabaddi League Season 9, Tamil Thalaivas squad analysis in tamil

Pro Kabaddi League Season 9 - Tamil Thalaivas

Pro Kabaddi League Season 9 -  Tamil Thalaivas Tamil News: 12 அணிகள் களமாடும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் வருகிற அக்டோபர் 7 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. டிசம்பர் மாத இறுதிவரை நடைபெற உள்ள இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்கான மெகா ஏலம் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், அனைத்து அணிகளும் தங்கள் அணியின் வீரர்களை படுபயங்கரமாய் தயார் செய்து வருகிறன்றன.

Advertisment

அவ்வகையில், புரோ கபடி லீக்கின் பிளே ஆஃப்பில் ஒருமுறை கூட கால் பதிக்காத தமிழ் தலைவாஸ் அணி, இம்முறை நட்சத்திர வீரர் பவன் செராவத் என்கிற 'பிரம்மாஸ்திரத்தை' கொண்டு, ஒரு மிக வலுவான அணியைக் கட்டமைத்துள்ளது. மேலும் இளம் மற்றும் அனுபவ வீரர்களை கொண்ட ஒரு சமபலம் பொருந்திய அணியாகவும் தமிழ் தலைவாஸ் தெரிகிறது. எனினும், அந்த அணி களத்தில் பொறியை பறக்க விடுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அதற்கு முன்னதாக, புரோ கபடி சீசன் 9-க்கான தமிழ் தலைவாஸ் அணி பற்றிய ஆழமான பகுப்பாய்வை இங்கு பார்க்கலாம்.

தமிழ் தலைவாஸ் அணி:

ரைடர்ஸ்:

பவன் குமார் செராவத், அஜிங்க்யா பவார், ஹிமான்ஷு சிங், நரேந்தர் கண்டோலா, ஜதின் போகட், ஹிமான்ஷு நர்வால்

டிஃபெண்டர்கள்:

சாகர் ரதீ, மோஹித் ஜாகர், சாஹில் குலியா, எம் அபிஷேக், அர்பித் சரோஹா, அங்கித் மாலிக், ஆஷிஷ், முகமது ஆரிப் ரப்பானி

ஆல்-ரவுண்டர்கள்:

ஹிமான்ஷு யாதவ், கே அபிமன்யு, தனுஷன் லக்ஸமமோகன், விஸ்வநாத் வி

வாத்தி ரெய்டு தொடருமா?

தமிழ் தலைவாஸ் அணியின் வாத்தியாராக அணியின் நட்சத்திர ரைடர் பவன் குமார் செராவத் இருக்கிறார். அவரை மட்டும் அணி நிர்வாகம் ரூ. 2.26 கோடிக்கு ஒப்பந்தம் செய்து, பிகேஎல் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஒப்பந்தம் என்பதை பதிவு செய்தது. செராவத்தை பொறுத்தவரை கடந்த மூன்று புரோ கபடி லீக் சீசன்களில் அவர் நம்பர் ஒன் ரைடராக திகழ்ந்து வருகிறார். கடந்த சீசனில் பெங்களூரு புல்ஸை அவர் பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்றார். மேலும் அவரது கேப்டன்சியின் கீழ், இந்திய ரயில்வே அணி மூன்று மூத்த தேசிய சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளது.

புரோ கபடியில் அவரது சிறப்பான சாதனையைப் பார்க்கும்போது, ​​இந்த சீசனில் தமிழ் தலைவாஸின் முதுகெலும்பாக அவர் திகழ்வார் என்று நம்பலாம். ரெய்டிங் பிரிவில் இளம் ரெய்டர்களான அஜிங்க்யா பவார் மற்றும் ஹிமான்ஷு சிங் ஆகியோரின் திறன் அவருக்கு கைகொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஆல்ரவுண்டரான ஹிமான்ஷு யாதவ் அணியில் இடம்பிடித்திருப்பது அணிக்கு சமபலம் கொடுத்துள்ளது.

டிஃபெண்ஸ் எப்படி?

முன்னாள் கேப்டன் சுர்ஜீத்தின் விலகல் அவரது டிஃபெண்ஸ்க்காக மட்டுமின்றி, கேப்டன்ஷிப்பில் அவருக்கு இருந்த திறமைக்காகவும் தலைவாஸ் அணிக்கு இந்த சீசனில் பெரும் இழப்பாக இருக்கும். ஒருவர் இல்லாதது இன்னொருவருக்குக் கிடைத்த வாய்ப்பு என்பார்கள். அதன்படி, தமிழ் தலைவாஸ் அணியின் புதிய கேப்டனாக ரைட் கார்னர் டிஃபென்டர் சாகர் ரதி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

ரதி முந்தைய சீசனில் அதிக டிஃபென்டிங் புள்ளிகளைப் பெற்று, சிறந்த டிஃபென்டர் விருதைப் பெற்றார். அவர் 22 ஆட்டங்களில் 82 டிஃபென்டிங் புள்ளிகளையும் பெற்று இருந்தார். இதேபோல், 69-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்திற்காக ஆல்ரவுண்ட் ஷோ மூலம் லெஃப்ட் கார்னர் டிஃபென்டர் விஸ்வநாத் வி ரசிகர்களை கவர்ந்தார். அவருடன் லெஃப்ட் கார்னர் டிஃபென்டர் சாஹில் குலியா மற்றும் பஞ்ச்குலாவில் நடந்த கேலோ இந்தியா யூத் கேம்ஸில் உத்தரபிரதேச அணியை வெண்கலப் பதக்கத்திற்கு அழைத்துச் சென்ற அர்பித் சரோஹாவும் அணியில் வலு சேர்க்கிறார்கள்.

லெஃப்ட் கவர் டிஃபென்டர் மோஹித் கடந்த சீசனியில் தமிழ் தலைவாஸ் அணிக்காக 20 போட்டிகளில் 24 டிஃபென்டிங் புள்ளிகளைப் பெற்றார். எனவே, இந்த சீசனிலும் அவர் அதே பொசிஷனில் ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம். கடந்த சீசனில் களமாடிய அபிஷேக் ஏழு ஆட்டங்களில் மட்டுமே விளையாடி, 12 டிஃபென்டிங் புள்ளிகளைப் பெற்றார். மோஹித் மற்றும் அபிஷேக்கின் மேம்பட்ட செயல்திறன் இந்த ஆண்டு அணி புள்ளிகள் பட்டியலில் முதல் 6 இடங்களுக்குள் முன்னேற உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு மாவீரர்கள்

தமிழ் தலைவாஸ் அணி கடந்த சீசன்களில் இரண்டு வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்களான இலங்கை அன்வர் பாபா ஷாஹித் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது துஹின் தரஃப்டர் ஆகியோருக்கு இடமளித்தது. ஆனால் அவர்கள் அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், அவர்களை அணி நிர்வாகம் தக்க வைக்கவில்லை. இருப்பினும், தலைவாஸ் அணி அதே நாட்டைச் சேர்ந்த வீரர்களுடன் தனது வெளிநாட்டுத் துறையை வலுப்படுத்தியுள்ளது.

தற்போது அந்த அணி வங்க தேச வீரர் முகமது ஆரிப் ரப்பானியை ரைட் கார்னர் டிஃபென்டராகவும், இலங்கையின் ஆல்ரவுண்டர் வீரர் தனுஷன் லக்ஸமமோகனையும் அணியில் இணைத்துள்ளது. இந்த இரண்டு மாவீரர்களும் ரூ.10 லட்சம் அடிப்படை விலையில் வாங்கப்பட்டுள்ளனர்.

டிரம்ப் கார்டுகளாக இளம் வீரர்கள் (NYP- New Young Players)

முந்தைய சீசனிஸ் தமிழ் தலைவாஸ் அணியின் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். குறிப்பாக மோஹித் ஜாகர் மற்றும் சாஹில் குலியா போன்றவர்கள் முதல் செவனில் முக்கிய பங்கு வகித்தனர். எனவே, இம்முறை நரேந்தர் கண்டோலா, ஜதின் போகட் மற்றும் ஹிமான்ஷு நர்வால் ஆகிய மூன்று இளம் வீரர்களை களமிறக்கியுள்ளது. நரேந்தர் கண்டோலா இந்திய விளையாட்டு ஆணையத்தின் இளைஞர் அமைப்பின் ரெய்டிங்கில் பட்டை தீட்டப்பட்டவர்.

மற்றொரு இளம் நட்சத்திரம் ஜதின் போகட்டுடன் காந்திநகர் மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். ஹிமான்ஷு ஒரு ஆற்றல்மிக்க லெஃப்ட் கவர் ரைடர் மற்றும் ஹரியானாவின் உள்ளூர் கபடி சுற்றுகளில் நம்பிக்கைக்குரிய செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி சாம்பியன்ஷிப்பில் வடக்கு மண்டலத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அமிர்தசரஸின் குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக ஜதின் போகட் இருந்தார். பின்னர் அவர் காசிரங்கா காண்டாமிருகத்திற்கான யுவ கபடி தொடரில் (ஒய்கேஎஸ்) பங்கேற்றார். இது தமிழ் தலைவாஸ் கண்களைக் கவர்ந்தது. தடோபா டைகர்ஸுக்கு எதிரான YKS லீக் போட்டியில், ஜதின் 16 டச் பாயிண்ட்கள் மற்றும் 3 போனஸ் புள்ளிகள் அடங்கிய ரெய்டிங் மாஸ்டர் கிளாஸுக்காக ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ் தலைவாஸ் அணியில் எதிர்பார்க்கப்படும் செவன்ஸ்:

பவன் குமார் செஹ்ராவத் (ரைடர்), அஜிங்க்யா பவார் (ரைடர்), ஹிமான்சு யாதவ் (ஆல்-ரவுண்டர்), எம் அபிஷேக் (ரைட் கவர்), மோஹித் ஜாகர் (லெஃப்ட் கவர்), சாஹில் குலியா (லெஃப்ட் கார்னர்), சாகர் ரதி (ரைட் கார்னர்).

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Sports Pro Kabaddi Tamil Thalaivas Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment