தமிழ் தலைவாஸ் அதிரடியில் அடங்கிபோன தெலுங்கு டைட்டன்ஸ் : அஜின்கியா அபாரம்

கடந்த போட்டியில் தபாங் டெல்லி அணிக்கு எதிராக ஆட்டத்தை சமன் செய்த தமிழ் தலைவாஸ் அணி இந்த ஆட்டத்தில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கியது.

தமிழ் தலைவாஸ் அதிரடியில் அடங்கிபோன தெலுங்கு டைட்டன்ஸ் : அஜின்கியா அபாரம்

12 அணிகள் பங்கேற்றுள்ள புரோ கபடி லீக் போட்டி கடந்த மாதம் 7-ந் தேதி பெங்களூருவில் தொடங்கியது. தற்போது இந்த போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது.

கடந்த போட்டியில் தபாங் டெல்லி அணிக்கு எதிராக ஆட்டத்தை சமன் செய்த தமிழ் தலைவாஸ் அணி இந்த ஆட்டத்தில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கியது. அதற்கு ஏற்றார்போல் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகள் சேகரித்தனர்.

பரபரப்பும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்த இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 52-24 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. தமிழக அணி சார்பில், அஜாக்யா பவர் 20 புள்ளிகளும், நரேந்தர் 10 புள்ளிகளும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 20 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 9 வெற்றி 7 தோல்வி 4 டிரா என மொத்தம் 61 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தோல்வியடைந்த தெலுங்கு டைட்டன்ஸ் அணி 20 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 15 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

இந்த பட்டிலில்ல புனேரி புல்டன் அணி 74 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பிங்க் பாந்தர்ஸ் அணி 69 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், யபியோத்த 65 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், பெங்களூர் புல்ஸ் அணி 63 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Pro kabaddi league tamil thalaivas beat telugu titans update in tamil

Exit mobile version