Advertisment

தெலுங்கு டைட்டன்சை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்: ஆட்டத்தை மாற்றிய அஜிங்கியா பவார்

கடந்த போடட்டியில், பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் டிரா செய்த தமிழ் தலைவாஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

author-image
WebDesk
New Update
புரோ கபடி லீக் 2022; ரெய்டில் அசத்திய ஹரியானா: 61-38 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் தோல்வி

புரோ கபடி லீக் தொடரில் இன்று நடைபெற்ற தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

Advertisment

12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 7-ந் தேதி தொடங்கியது. இதில் இன்று புனேயில் நடைபெற்ற ஒரு போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. கடந்த போடட்டியில், பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் டிரா செய்த தமிழ் தலைவாஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் சேர்த்தது. இதனால் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்று யூகிக்க மடியாத நிலை ஏற்பட்ட நிலையில், இறுதிக்கட்டத்தில் அசத்தலாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 39-31 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. தமிழ் தலைவாஸ் அணி சார்பில் அஜிங்கியா பவார் 12 புள்ளிகள் பெற்று வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இதன் மூலம் 10 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 4 வெற்றி 4 தோல்வி 2 டிரா என 28 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 11 போட்டிளில் விளையாடி ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ள தெலுங்கு டைட்டன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி அடுத்து புனேரி புல்டன் அணியை நாளை (நவ 06) எதிர்கொள்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Sports Update Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment