Pro Kabaddi: தமிழ் தலைவாஸ் அரை இறுதிக்கு தகுதி; டைபிரேக்கரில் யு.பி யோத்தாவை சாய்த்தது

புரோ கபடி லீக் போட்டியில் எலிமினேஷன் சுற்றில் தமிழ் தலைவாஸ் அணியும் உ.பி யோத்தா அணியும் மோதிய பரபரப்பான ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

புரோ கபடி லீக் போட்டியில் எலிமினேஷன் சுற்றில் தமிழ் தலைவாஸ் அணியும் உ.பி யோத்தா அணியும் மோதிய பரபரப்பான ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pro Kabaddi: தமிழ் தலைவாஸ் அரை இறுதிக்கு தகுதி; டைபிரேக்கரில் யு.பி யோத்தாவை சாய்த்தது

Pro Kabaddi Tamil Thalaivas vs UP Yoddhas: புரோ கபடி லீக் போட்டி 9-வது சீசன் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் 12 அணிகள் பங்கேற்றன. இந்த புரோ கபடி லீக் போட்டியில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. லீக் முடிவில் டாப்-2 இடங்களை பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (82 புள்ளி), புனேரி பால்டன் (80 புள்ளி) ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று நேரடியாக அரைஇறுதியில் விளையாடுகின்றன.

Advertisment

இதே போல் 3-வது இடத்தை பெங்களூரு புல்சும் (74 புள்ளி), 4-வது இடத்தை உ.பி. யோத்தாசும் (71 புள்ளி), 5-வது இடத்தை தமிழ் தலைவாசும் (66 புள்ளி), 6-வது இடத்தை நடப்பு சாம்பியன் தபாங் டெல்லியும் (63 புள்ளி) பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு வந்துள்ளன.

பிளே-ஆப் சுற்று மும்பையில் இன்று தொடங்கியது. இன்று (டிசம்பர் 13) நடக்கும் எலிமினேஷன் சுற்று ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ்- தபாங் டெல்லி அணிகளும், தமிழ் தலைவாஸ்- உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் அரைஇறுதிக்கு செல்லும். தோல்வி அடையும் அணி இந்த சீசனில் இருந்து வெளியேறும்.

புரோ கபடி லீக் போட்டிகளில் முதல் முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு சென்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி உ.பி யோத்தாஸை வீழ்த்தி அரையிறுதிக்கு செல்லுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். உ.பி யோத்தாஸ் - தமிழ் தலைவாஸ் இரண்டு அணிகளும் இதற்கு முன் விளையாடி 2 போட்டிகளில் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

Advertisment
Advertisements

இந்த நிலையில்தான், உ.பி யோத்தாஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மும்பையில் உள்ள என்.எஸ்.சி.ஐ எஸ்.வி.பி ஸ்டேடியத்தில் எலிமினேஷன் சுற்றில் மோதியது.

ஆட்டம் தொடங்கியது முதலே தமிழ் தலைவாஸ் அணி முன்னிலை வகித்து வந்தது. தமிழ் தலைவாஸ் அணி 2 முறை உ.பி யோத்தா அணியை ஆல் அவுட் செய்து அசத்தியது. ஆனால், ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் சுறுசுறுப்பாக விளையாடிய உ.பி யோத்தா அணி வீரர்கள் தமிழ் தலைவாஸ் அணிக்கு நிகராக புள்ளிகளை எடுத்தனர். இதனால், ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 36 புள்ளிகளைப் பெற்று சமநிலையில் இருந்தது.

இதனால், இரு அணிகளும் டை பிரேக்கரில் மோதியது. இதில் ஒவ்வொரு அணிக்கும் 5 ரைடுகள் கொடுக்கப்பட்டன. இதில், தமிழ் தலைவாஸ் அணி 4 புள்ளிகளையும் உ.பி யோத்தா 3 புள்ளிகளையும் எடுத்தது. இதன் மூலம், தமிழ் தலைவாஸ் அணி உ.பி யோத்தாவை சாய்த்து அரையிறுதிக்கு முன்னேறியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Pro Kabaddi League Tamil Thalaivas Pro Kabaddi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: