புரோ கபடி லீக்; 10 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸை வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ்

புரோ கபடி லீக்; முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ்; இரண்டாம் பாதியில் மீண்டு எழுந்த பெங்கால் வாரியர்ஸ்; 10 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி

புரோ கபடி லீக்; முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ்; இரண்டாம் பாதியில் மீண்டு எழுந்த பெங்கால் வாரியர்ஸ்; 10 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி

author-image
WebDesk
New Update
Tamil Thalaivas PKL 10 Auction 2023 Full list of players in tamil

புரோ கபடி லீக்; முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ்; இரண்டாம் பாதியில் மீண்டு எழுந்த பெங்கால் வாரியர்ஸ்; 10 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி

புரோ கபடி லீக்கில் இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை பெங்கால் வாரியர்ஸ் அணி தோற்கடித்தது.

Advertisment

புரோ கபடி லீக்கில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்க் கொண்டது.

இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் கடுமையாக மோதின. இருப்பினும் தமிழ் தலைவாஸ் கை ஓங்கியிருந்தது. ரைடு மற்றும் டாக்கிள் பாயிண்ட்களை இரு அணிகளும் மாறி மாறி எடுத்தன. முதல் பாதியில் பெங்கால் 21 புள்ளிகள் எடுத்த நிலையில், தமிழ் தலைவாஸ் 27 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்தது.

ஆனால் அதன்பிறகு ஆட்டத்தின் போக்கு மாறியது. இறுதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 48 புள்ளிகளைப் பெற்றது. தமிழ் தலைவாஸ் 38 புள்ளிகளை பெற்றது. இதன் மூலம் 10 புள்ளிகள் அடிப்படையில் பெங்கால் வாரியர்ஸ் வெற்றி பெற்றது.

Advertisment
Advertisements

பெங்கால் வாரியர்ஸ் அணியில், மனீந்தர் சிங் 13 ரைடு பாயிண்ட்களை எடுத்தார். ஷூபம் ஷிண்டே 10 டாக்கிள் பாயிண்ட்களை எடுத்தார்.

தமிழ் தலைவாஸ் அணியில் நரேந்தர் 9 ரைடு பாயிண்டுகளையும், 2 டாக்கிள் பாயிண்ட்களையும் எடுத்தார். அஜிங்கியா பவார் 5 ரைடு பாயிண்ட்களை எடுத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Thalaivas Pro Kabaddi League

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: