Advertisment

யு.பி யோத்தா-வை 'அடிச்சு'... அப்புறம் புனேரி பல்தானை 'பந்தாடி'... சாம்பியன் கனவில் தமிழ் தலைவாஸ்!

ப்ரோ கபடி ப்ளேஆஃப் சுற்று; இறுதிப் போட்டிக்கு செல்லுமா தமிழ் தலைவாஸ்? எத்தனை போட்டிகள்? யார் யாருடன்? எங்கே பார்ப்பது? முழுவிவரம் இங்கே

author-image
WebDesk
New Update
Tamil Thalaivas

ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள தமிழ் தலைவாஸ் அணி இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. இருப்பினும், இறுதிப் போட்டிக்கு முன்னேறவே இரண்டு பலம் வாய்ந்த அணிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

Advertisment

ப்ரோ கபடி லீக்கின் ஒன்பதாவது சீசனின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஆறு அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளன. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் புனேரி பல்டன் அணிகள், புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்ததன் மூலம், நேரடியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது, அந்த அணிகள் எலிமினேட்டர் போட்டிகளில் விளையாட வேண்டியதில்லை.

இதையும் படியுங்கள்: புரோ கபடி லீக் 2022; ரெய்டில் அசத்திய ஹரியானா: 61-38 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் தோல்வி

பெங்களூரு புல்ஸ், உ.பி யோதாஸ், தமிழ் தலைவாஸ் மற்றும் தபாங் டெல்லி ஆகிய நான்கு அணிகள் எலிமினேட்டர் போட்டிகளை விளையாட உள்ளது. இந்த அணிகள் அரையிறுதியில் இடம்பிடிக்க இரண்டு எலிமினேட்டர் போட்டிகளில் ஒன்றையொன்று மோதிக் கொள்ளும்.

இதில் தமிழ் தலைவாஸ் அணி எலிமினேட்டர் சுற்றில் உ.பி யோதாஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி புனேரி பால்டன் அணியை அரையிறுதியில் எதிர்கொள்ளும். எனவே தமிழ் தலைவாஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற பலம் வாய்ந்த இரு அணிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

புரோ கபடி லீக்கின் பிளேஆஃப் போட்டிகள் டிசம்பர் 13 முதல் 15 வரையிலும், இறுதிப் போட்டி டிசம்பர் 17ஆம் தேதி மும்பையிலும் நடைபெறும்.

தகுதி பெற்ற அனைத்து அணிகளின் வீரர்கள் விவரம்

ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்:

ரைடர்ஸ்: அர்ஜுன் தேஷ்வால், அஜித் வி குமார், ராகுல் சவுதாரி, பவானி ராஜ்புத், நிதின் பன்வார், நவ்நீத், தேவாங்க்

டிஃபெண்டர்கள்: சுனில் குமார், வூசன் கோ, சாஹுல் குமார், ரெசா மிர்பகேரி, அபிஷேக் கே.எஸ், ஆஷிஷ், அங்குஷ், தீபக் சிங், லக்கி சர்மா, நிதின் சாண்டல், மாரிமுத்து காமராஜ்

ஆல்-ரவுண்டர்கள்: ராகுல் கோரக் தனவாடே

புனேரி பால்டன்:

ரைடர்ஸ்: அஸ்லாம் முஸ்தபா இனாம்தார், மோஹித் கோயத், ஆதித்யா துஷார் ஷிண்டே, ஆகாஷ் சந்தோஷ் ஷிண்டே, பங்கஜ் மோஹிதே, சவுரப்

டிஃபெண்டர்கள்: ஃபசல் அத்ராச்சலி, சோம்பிர், ஆகாஷ் சவுத்ரி, பாதல் தக்திர் சிங், அபினேஷ் நடராஜன், சங்கேத் சாவந்த், அலங்கார் கலுராம் பாட்டீல், ராகேஷ் பல்லே ராம், டி மஹிந்த்ரபிரசாத், ஹர்ஷ் மகேஷ் லாட், கௌரவ் காத்ரி

ஆல்-ரவுண்டர்கள்: முகமது எஸ்மாயில் நபிபக்ஷ், கோவிந்த் குர்ஜார், பாலாசாகேப் ஷாஹாஜி ஜாதவ்

பெங்களூரு புல்ஸ்:

ரைடர்ஸ்: விகாஷ் கண்டோலா, பாரத், நீரஜ் நர்வால், மோர் ஜி பி, ஹர்மன்ஜித் சிங், நாகேஷோர் தாரு, லால் மோஹர் யாதவ், ஹர்மன்ஜீத் சிங்,

டிஃபெண்டர்கள்: மயூர் கதம், மகேந்தர் சிங், அமன், சவுரப் நந்தல், ராஜ்னேஷ், யாஷ் ஹூடா, நாயக், ரோஹித் குமார்., சுதாகர் கிரிஷாந்த்

ஆல்-ரவுண்டர்கள்: ராகுல் காடிக், சச்சின் நர்வால், ராஜேஷ் நர்வால், நரேந்தர் ஹூடா

உ.பி யோதாஸ்:

ரைடர்ஸ்: பர்தீப் நர்வால், சுரேந்தர் கில், நிதின் தோமர், ஜேம்ஸ் நமபா கம்வெட்டி, ரத்தன் கே, குல்வீர் சிங், துர்கேஷ் குமார், அனில் குமார், ரோஹித் தோமர், அமன், மஹிபால், ரத்தன் கே.

டிஃபெண்டர்கள்: நிதேஷ் குமார், அபோசர் மொஹஜர் மிகானி, சுபம் குமார், பாபு முருகேசன், ஜெய்தீப், சுமித், ஆஷு சிங்

ஆல்-ரவுண்டர்கள்: நேஹால் தேசாய், நிதின் பன்வார், குர்தீப்

தமிழ் தலைவாஸ்

ரைடர்ஸ்: பவன் குமார் செஹ்ராவத், அஜிங்க்யா அசோக் பவார், சச்சின், ஹிமான்ஷு நர்வால், ஹிமான்ஷு சிங், நரேந்தர்

டிஃபெண்டர்கள்: சாகர், அங்கித், எம்.அபிஷேக், ஆஷிஷ், எம்.டி. ஆரிப் ரப்பானி, ஹிமான்ஷு, மோஹித், சாஹில் குலியா, அர்பித் சரோஹா.

ஆல்-ரவுண்டர்கள்: விஸ்வநாத் வி, தனுஷன் லக்ஷ்மமோஹா, கே அபிமன்யு.

தபாங் டெல்லி:

ரைடர்ஸ்: நவீன் குமார், மஞ்சீத், ஆஷு மாலிக், ஆஷிஷ் நர்வால், சூரஜ் பன்வார்

டிஃபெண்டர்கள்: ரவிக்குமார், சந்தீப் துல், அமித் ஹூடா, விஷால், அனில் குமார், மோனு, தீபக், கிரிஷன், வினய் குமார், விஜய், முகமது லிட்டன் அலி, ஆகாஷ்

ஆல்-ரவுண்டர்கள்: விஜய், தேஜாஸ் பாட்டீல், ரேசா கடோலினேசாத்

ப்ரோ கபடி ப்ளே ஆஃப் போட்டிகளை எப்படி பார்ப்பது?

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ப்ரோ கபடி லீக் பிளேஆஃப்களின் நேரடி ஒளிபரப்பைப் பார்க்கலாம். டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் பயன்பாட்டிலும் போட்டிகளை கண்டுகளிக்கலாம்.

இந்த முறையாவது தமிழ் தலைவாஸ் கோப்பை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Thalaivas Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment