புரோ கபடி: முதல் போட்டியிலேயே தெலுங்கு அணியை அலற விட்டு, கம்பீர வெற்றி பெற்ற ’தமிழ் தலைவாஸ்’!

Pro Kabaddi: வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ் அணியில் ராகுல் சவுத்ரி 12 புள்ளிகளும், மன்ஜீத் சில்லார் 6 புள்ளிகளும், கேப்டன் அஜய் தாகூர் 4...

வருடந்தோறும் நடக்கும் புரோ கபடி லீக், தற்போது இதன் 7-வது லீக் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் விளையாடும் தமிழக அணிக்கு ‘தமிழ் தலைவாஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த லீக்கின் முதல் மேட்சில் விளையாடிய தமிழ் ’தலைவாஸ் அணி’, ’தெலுங்கு டைட்டன்ஸ்’ அணியை வீழ்த்தி, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

நேற்று மோதிய ‘தமிழ் தலைவாஸ்’ அணியும், ’தெலுங்கு டைட்டன்ஸ்’ அணியும் முதல் 10 நிமிடம் மாறி மாறி புள்ளிகளை சேர்த்தனர். பின்னர் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிகளை சேர்ப்பதில் இன்னும் வேகம் காட்டியது. இந்த அணிக்கு புதிதாக வந்துள்ள, ராகுல் சவுத்ரி, ரைடு மூலம் எதிராளியை மிரட்டினார். முதல் பாதியில் தெலுங்கு அணியை ஆல்-அவுட் செய்த தமிழ் தலைவாஸ் அணி வலுவான முன்னிலை பெற்றது.

அடுத்துத் தொடங்கி ஆட்டத்தில் வீரர்களின் மிடுக்கான ஆட்டத்தால் மீண்டும் தெலுங்கு டைட்டன்ஸ் அணினை ஆல் அவுட் செய்தது தமிழ் தலைவாஸ். 39-26 என்ற புள்ளி கணக்கில் இவர்கள் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தனர். வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ் அணியில் ராகுல் சவுத்ரி 12 புள்ளிகளும், மன்ஜீத் சில்லார் 6 புள்ளிகளும், கேப்டன் அஜய் தாகூர் 4 புள்ளிகளும் எடுத்திருந்தனர். அதோடு தெலுங்கு டைட்டஸ் அணிக்கு இது 2-வது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, இன்று மாலை 7.30 மணிக்கு, ’யூ மும்பை’ அணியுடன் ‘பிங்க் பந்தர்ஸ்’ அணி மோதுகிறது. அதைத் தொடர்ந்து 8.30 மணிக்கு ’புனேரி பல்தான்’ அணியுடன் ‘ஹரியானா ஸ்டீலர்ஸ்’ அணி விளையாடுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close