Advertisment

5 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் தோல்வி

புரோ கபடி சீசன் 9 லீக் போட்டிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் தலைவாஸ் அணியும் அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதியது. இதில், தமிழ் தலைவாஸ் அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

author-image
WebDesk
New Update
pro kabaddi league, pro kabaddi season 9, Tamil Thalaivas vs haryana steelers, pro kabaddi tamil thalaivas players 2022, pro kabaddi tamil thalaivas today match, tamil thalaivas players list, tamil thalaivas retained players 2022, tamil thalaivas, tamil thalaivas captain 2022, pro kabaddi tamil thalaivas match, tamil thalaivas 2022, Tamil Thalaivas, Haryana steelers, Haryana kabaddi team

புரோ கபடி சீசன் 9 லீக் போட்டிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் தலைவாஸ் அணியும் அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதியது. இதில், தமிழ் தலைவாஸ் அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Advertisment

புரோ கபடி லீக் 9-வது சீசன் அக்டோபர் 7-ம் தேதி பெங்களூருவில் தொடங்கியது. இந்த தொடரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 12-வது 'லீக்' ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதியது.

இதற்கு முன்னதாக, தமிழ் தலைவாஸ் அணி முதல் போட்டியில், குஜராத் அணியுடன் 31-31 என்ற புள்ளி கணக்கில் போட்டியை சமன் செய்தது. இதனால், இன்றைய போட்டியில் அரியானாவுடன் வெற்றிகொள்ள வேண்டும் என்ற முனைப்பில், தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கியது.

தமிழ் தலைவாஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இடையே பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் அரியானா 27 புள்ளிகளையும் தமிழ் தலைவாஸ் அணி 22 புள்ளிகளையும் பெற்றது. இதனால், தமிழ் தலைவாஸ் அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இதற்கு முன்னதாக, அரியானா அணி முதல் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் வெற்றியை வீழ்த்தியதன் மூலம் அரியானா அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Pro Kabaddi League Tamil Thalaivas Pro Kabaddi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment