scorecardresearch

PRO Kabaddi: தமிழ் தலைவாஸ்-க்கு முதல் வெற்றி

புரோ கபடி லீக் போட்டியில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த தமிழ் தலைவாஸ் அணி, இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா அணியை வீழ்த்தி இந்த தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

PRO Kabaddi: தமிழ் தலைவாஸ்-க்கு முதல் வெற்றி

புரோ கபடி லீக் போட்டியில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த தமிழ் தலைவாஸ் அணி, இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

புரோ கபடி லீக் தொடரின் 9-வது சீசன் அக்டோபர் 7-ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ் தலைவாஸ் அணி, குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியில் ‘டை’ செய்தது. அரியானாவிற்கு எதிரான இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்தது. இதையடுத்து யு மும்பா அணியுடனான போட்டியில் 32-39 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் தோல்வி அடைந்தது. இரண்டு தொடர் தோல்விகளை சந்தித்த தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில், இன்று பாட்னா அணியுடன் மோதியது.

தமிழ் தலைவாஸ் – பாட்னா பைரட்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களூரு கண்டீவரா விளையாட்டரங்கில் போட்டி நடைபெற்றது. இதில் முதல் பாதியில் பின்தங்கி இருந்த தமிழ் தலைவாஸ் அணி 2-வது பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக தமிழ் தலைவாஸ் அணி வீரர் ஹிமான்ஷு சிறப்பாக ரெய்டு சென்று 11 புள்ளிகளை பெற்று கொடுத்தார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 33-32 என்ற புள்ளி கணக்கில் பாட்னா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதன் மூலம், புரோ கபடி லீக் 9வது சீசன் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி முதல் வெற்றியைப் பெற்று தனது வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Pro kabaddi tamil thalaivas vs patna pirates kabaddi match updates

Best of Express