Advertisment

புரோ கபடி போட்டி: தமிழ் தலைவாஸ் தொடர் தோல்வி!

பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீவார விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் யு மும்பா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pro kabaddi 9 season, pro kabaddi, pro kabaddi league, Tamil Thalaivas, Tamil Thalaivas v U Mumba, u mumba team 2022 players list, pro kabaddi u mumba team 2022, u mumba retained players 2022, u mumba upcoming matches, u mumba team 2022 auction, u mumba owner, kabaddi u mumba players, u mumba matches 2022

பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீவார விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் யு மும்பா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது.

Advertisment

புரோ கபடி 9வது சீசன் லீக் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீவார விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. புரோ கபடி தொடரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் - யு மும்பா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் - யு மும்பா ஆகிய இரு அணி வீரர்களும் சம பலத்துடன் விளையாடினர். இதனால், இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 16 புள்ளிகளும் யு மும்பா 15 புள்ளிகளும் எடுத்தன. இதில் தமிழ் தலைவாஸ் அணி முன்னிலை பெற்றது.

இதையடுத்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில், யு மும்பா அணி சிறப்பாக விளையாடி புள்ளிகளை எடுத்தது. இதனால், ஆட்டத்தின் முடிவில் யு மும்பா அணி 39 புள்ளிகளையும் தமிழ் தலைவாஸ் அணி 32 என்ற புள்ளிகளையும் எடுத்திருந்தன. இதன் மூலம், யு மும்பா அணி 7 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது.

தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 3 போடிகளில் விளையாடி 2 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஒரு போட்டியில் டை செய்துள்ளது. இந்த போட்டியில் தோற்றதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Pro Kabaddi League Tamil Thalaivas Pro Kabaddi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment