தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் உதயகுமார் அணியில் இருந்து விலகியுள்ளது அணிக்கு மற்றொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து தமிழ் தலைவாஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தலைமைப் பயிற்சியாளர் உதயகுமாரின் படத்தைப் பகிர்ந்துகொண்டு, "தனிப்பட்ட அவசரநிலை காரணமாக பயிற்சியாளர் ஜே உதயகுமார் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவார் என்பதை கிளப் உறுதிப்படுத்துகிறது. கடந்த 2 ஆண்டுகளாக அணியின் பயிற்சியாளராக பங்களிப்பு அளித்தற்கு, அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்” எனப் பதிவிட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழ் தலைவாஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அஷன் குமார் பொறுப்பேற்றுள்ளார். "எங்கள் புதிய தலைமை பயிற்சியாளர் அஷன் குமாருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுப்போம்." "உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பல வருட அனுபவத்துடன், அவரது இந்தப் புதிய பயணத்தில், தமிழ் தலைவாஸ் அணியை அவர் பெரிய உயரத்திற்கு அழைத்துச் செல்வார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்," என தமிழ் தலைவாஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், தனிப்பட்ட அவசரநிலை காரணமாக ஜே உதயகுமார் பதவியில் இருந்து விலகியதாக அணி நிர்வாகம் குறிப்பிட்டது, ஆனால் தமிழ் தலைவாஸ் நிர்வாகம் அவரை நீக்கியதாக வதந்திகள் பரவின.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil