அக்கார்டு ஓட்டல்களின் ஊழியர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியினை சமையல்கலை நிபுணர் வெங்கடேஷ் பட் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி, சென்னை மற்றும் பெருநகரங்களில் உள்ள அக்கார்டு ஓட்டல்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. துத்திப்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஐந்து அணிகள் பங்கேற்றன.
இந்தப் போட்டிகளை சமையல் கலை நிபுணர் வெங்கடேஷ் பட்டு தொடங்கி வைத்தார். இதுபற்றி அவர் பேசுகையில், தங்களது நிறுவனத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்த போட்டியை நடத்தியதாகவும் தெரிவித்தார்.
/indian-express-tamil/media/post_attachments/4360d474-4c8.jpg)
இறுதிப் போட்டியில் சென்னை அக்கார்டு அணியும் புதுச்சேரி அக்கார்டு அணியும் மோதியது. இதில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. முதலிடத்தைப் பெற்ற சென்னை அணிக்கும் இரண்டாம் இடம் பெற்ற புதுச்சேரி அணிக்கும் பரிசுகளை அக்காடு இயக்குனர் தியாகராஜன்,தலைமை செயல் அதிகாரி அருண்ராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.