புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் செம்மண் பூமியில் நடந்த குதிரை ஏற்ற போட்டியில் 18 முதல் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கான 120 சென்டிமீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் பெங்களூர் நேத்ரா முதல் பரிசை தட்டிச் சென்றார்.
புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் குதிரை ஏற்றும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அளிப்பு விழா நேற்று இரவு நடந்தது. முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் ரெட் எர்த் குதிரை ஏற்ற பள்ளி பள்ளியில் 23வது தேசிய அளவிலான குதிரை ஏற்ற போட்டி கடந்த நான்கு நாட்களாக நடந்தது. இதில், பல்வேறு மாநில, மாவட்டத்தை சேர்ந்த குதிரை ஏற்ற வீரர்கள் கலந்து கொண்டனர். இறுதி நாளான நேற்று இரவு மாலை நான்கு மணிக்கு தொடங்கிய போட்டியில் 18 முதல் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடை தாண்டுதல் போட்டி நடந்தது.
இப்போட்டியில், பெங்களூரைச் சேர்ந்த நேத்ரா மற்றும் தனுஷ் கவுடா ஆகியோர் முதல் இடத்தை பிடித்தனர். மற்றொரு குதிரை ஏற்றம் போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடத்தை தனுஷ் கவுடா பெற்றார். 120 சென்டிமீட்டர் தடை தாண்டும் பிரிவில் சென்னை வீரர் நிக்கி, பெங்களூரைச் சேர்ந்த நேத்ரா, சென்னை பரத் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
இறுதிப் போட்டியை தொடர்ந்து குதிரையில் அலங்கார உடையில் வீரர்கள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி நடந்தது ஆரோவில் ரெட் குதிரை ஏற்ற பள்ளி பள்ளியின் உரிமையாளர் ஜாக்குலின் ஊட்டியைச் சேர்ந்த கர்ணன் சிவதாஸ் ஆகியோர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார் பரிசுகளை வழங்கினார்.