பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில அளவில் நடைபெற்ற கில்லி விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பரிசு மற்றும் கேடயம் வழங்கி வாழ்த்தி பேசினார்.
தமிழ்நாடு முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70–வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி 'நண்பேன்டா கில்லி குரூப்' மற்றும் ராஜ்பவன் தொகுதி திமுக செயலாளர் ஜே. மோகன், மாநில தொண்டர் அணி துணை அமைப்பாளர் என்.பி. வீரய்யன் என்கிற வீரன் ஆகியோர் சார்பில் மாநில அளவிலான பாரம்பரிய கில்லி விளையாட்டு போட்டி ஒதியம்பட்டு குளூனி பள்ளி பின்புறம் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய கில்லி போட்டியை மாநில திமுக அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் வி. அனிபால் கென்னடி, இரா. செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இதில் புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கில்லி விளையாட்டுக் குழுவினர் பங்கேற்றனர். பின்னர் மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா கலந்து கொண்டு, கில்லி விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கேடயம் வழங்கி, வாழ்த்தி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், தொகுதி செயலாளர்கள் ல. மணிகண்டன், இரா. சக்திவேல், தியாகராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வநாதன், கோபால், கோபாலகிருஷ்ணன், தர்மராஜ், முருகையன், அங்காளன், செல்வநாதன், மிலிட்டரி முருகன், அரிகிருஷ்ணன், மந்திரிகுமார், ரமணன், கார்த்திகேயன், அன்பு, தயாளன், அஞ்சாபுலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil