ஜெர்மனியில் ஜூன் 17ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதிவரை நடைபெற்ற சர்வதேச கோடைகால சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் புதுச்சேரியிலிருந்து மொத்தம் 8 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் 2 பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
Advertisment
விளையாட்டு வீரர்கள் வெற்றிபெற்று பதக்கங்களை வென்று புதுவைக்கு புகழ் சேர்த்துள்ளனர்.
அந்த வகையில், விளையாட்டு வீரர்களின் பெயர், பங்கேற்ற போட்டி மற்றும் வென்ற பதக்கம் குறித்து பார்க்கலாம்.
1) தனசேகர், (மாற்றுத்திறனாளி) சத்யா சிறப்பு பள்ளி கூடைப்பந்து தங்கம் 2) விஷால் (மாற்றுத்திறனாளி) சத்யா சிறப்பு பள்ளி வலுதூக்கும் போட்டி நான்கு பிரிவுகளில் நான்கு வெள்ளிப் பதக்கம் 3) செல்வி ரவிமதி 400 மீட்டர் ஓட்டம் தங்கம் ஈட்டி எரிதல் வெள்ளி 4) செல்வி காயத்ரி கைப்பந்து (பெண்கள் பிரிவில்) தங்கம் 5) செல்வி சுபலட்சுமி கைப்பந்து (பெண்கள் பிரிவில்) தங்கம் 6) செல்வி ஹேமாவதி கால்பந்து (பெண்கள் பிரிவில் வெண்கலம் 7) செல்வி வித்யஸ்ரீ கால்பந்து (பெண்கள் பிரிவில் வெண்கலம் 8) விஷ்ணுபிரியன் கைப்பந்து (ஆண்கள் பிரிவில் வெண்கலம்
இதுதவிர, இந்திய கூடைப்பந்து அணிக்காக புதுச்சேரியிலிருந்து பங்கேற்ற பயிற்சியாளர் ஆனந்த் தங்கப்பதக்கமும், இறகுப்பந்து அணிக்காக பங்கேற்ற பயிற்சியாளர் நித்யா பூங்காவனம் மூன்று தங்கப்பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.
மாணவர்களை பாராட்டிய முதலமைச்சர் ரங்கசாமி
பதக்கங்களை வென்றுள்ள வீரர், வீராங்கணைகள் மற்றும் பயிற்சியாளர்கள், முதலமைச்சர் ந, ரங்கசாமி அவர்களை, சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின்போது, மாவட்ட ஆட்சியர் இ. வல்லவன், அவர்கள் உடனிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“