சர்வதேச அளவில் கிக்பாக்ஸிங் போட்டி பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 10 வீரர்கள் கலந்து கொண்டனர் .
புதுச்சேரி லாஸ்பேட்டை மாருதி கேந்திர வித்யாலயா பள்ளி மேல்நிலைப்பள்ளி, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, பெட்டிட் செமினார் மேல்நிலைப்பள்ளி, ஆதித்யா வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளி என அனைத்து பள்ளிகளில் இருந்தும் 7 மாணவர்கள் பங்கேற்றர்.
புதுச்சேரி மாணவர் லோகேஷ் 37 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கமும், முகேஷ் 42 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம், கவுசிக் 47 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கமும் வென்றனர். ஆதேஷ் 28 கிலோ எடை பிரிவில் வெள்ளிப்பதக்கமும், ஹேமந்த் 32 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கமும், பவித்ரன் 37 கிலோ எடை பிரிவில் வெண்கலப்பதக்கமும், மவுசின் 32 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும் பெற்றனர்.
அணியின் மேலாளர் ராஜமாணிக்கம், குப்புசாமி அவர்கள். அணியின் தேசிய நடுவர் நடுவர் கிருஷ்ணராஜ் மற்றும் பயிற்சியாளர்கள் தினேஷ் மற்றும் வினோத் பெற்றோர்கள் கலியபெருமாள், குமாரவிஜயன், ரமேஷ், முருகானந்தம் பொதுமக்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் நாகராஜ் வெற்றி பெற்ற மாணவ வீரர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.