Cheteshwar Pujara: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னனி வீரராக விளையாடி வருபவர் சேட்டேஷ்வர் புஜாரா. இவர் தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், இத்தொடரில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் புஜாரா, விதர்பாவுக்கு எதிரான போட்டியில், முதல் தர கிரிக்கெட்டில் 20,000 ரன்களைக் கடந்த 4வது பேட்ஸ்மேன் என்கிற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.
நாக்பூரில் நடைபெற்ற விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் சவுராஷ்டிரா அணியின் புஜாரா முதல் இன்னிங்சில் 43 ரன்கள் அடித்தார். இதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது இன்னிங்சில் 66 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை புஜாரா படைத்திருக்கிறார்.
35 வயதான புஜாரா 260 போட்டிகளில் 51.96 சராசரியில் இந்த சாதனை படைத்துள்ளார். புஜாராவை விட முன்னிலையில் தற்போதைய இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் (55.33 சராசரி 23,794 ரன்) 3வது இடத்திலும், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் (25,396 ரன் 57.84) 2ம் இடத்திலும் , மற்றும் லிட்டில் மாஸ்டர் சுனில் கவாஸ்கர் (51.46 சராசரி 25,834 ரன்) முதலிடத்திலும் உள்ளனர்.
புஜாரா ரஞ்சி கிரிக்கெட்டில் சிறந்த ரன்களை குவிப்பவராகவும், சசெக்ஸ் அணிக்காக இங்கிலாந்தில் உள்ள கவுண்டி கிரிக்கெட் அணிக்காக மிடில் ஆர்டரில் ஒரு தூணாகவும் இருந்துள்ளார். மேலும், அவர் இந்தியாவுக்காக 103 போட்டிகளில் விளையாடி 43.61 சராசரியில் 103 ரன்கள் குவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Cheteshwar Pujara reaches 20,000 runs and joins elite list of Rahul Dravid, Sachin Tendulkar and Sunil Gavaskar
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“