Advertisment

புரோ கபடி லீக் : ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது புனேரி : பெங்களூருக்கு

புரோ கபடி லீக் தொடரில் இன்று (திங்கள்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெற்ற போட்டியில் புனேரி பல்டன் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் அணிகள் மோதியது.

author-image
WebDesk
New Update
Puneri Paltan vs Jaipur Pink Panthers and Bengaluru Bulls vs Bengal Warriors Pro Kabaddi 2023 update in tamil

புரோ கபடியில்லீக்: புனேரி vs ஜெய்ப்பூர் - பெங்களூரு vs பெங்கால் அணிகள் மோதல்!

pro-kabaddi-league: 12 அணிகள் களமாடி வரும் 10-வது புரோ கபடி லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தொடக்க லீக் போட்டியில் குஜராத் அணி 38-32 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

Advertisment

இதைத்தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான யு மும்பா அணி 34-31 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாசை வீழ்த்தியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தபாங் டெல்லியை 42-31 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடந்த போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பெங்களூரு புல்ஸ் அணியை 34-31 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது.

இந்நிலையில், இன்று திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கிய போட்டியில் புனேரி பல்டன் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதியது.தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் புள்ளிகள் இரு அணிகளும் சமமாக பெற்றன. ஆனாலும், இறுதியில் புனேரி பல்தான் அணி 37-33 என்ற புள்ளி கணக்கில், ஜெய்ப்பூர் பின்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.

புனேரி அணி தரப்பில், அஸ்லாம் 10 புள்ளிகளும், மொஹித் 8 புள்ளிகளும், செய்னிஹா 5 புள்ளிகளும் எடுத்தனர். ஜெய்ப்பூர் அணி தரப்பில் அர்ஜூன் தேஷ்வால் 17 புள்ளிகள் எடுத்திருந்தாலும் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றியை தவறவிட்டது.

தொடர்ந்து, இரவு 9 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதியது. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றதால் இந்த ஆட்டம் சமநிலையில் சென்றது. ஆனாலும் இறுதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 32-30 என்ற புள்ளி கணக்கில் பெங்களுரு புல்ஸ் அணியை வீழ்த்தியது. 

பெங்கால் அணி தரப்பில் அதிகபட்சமாக மணிந்தர் சிங் 11 புள்ளிகள் எடுத்தார். பெங்களூரு அணி தரப்பில் பரத் அதிகபட்சமாக 6 புள்ளிகள் எடுத்தார். இரு அணிகளும் பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், 2 புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment