Advertisment

புரோ கபடி லீக் : அரியானா ஸ்டீலர்ஸ், புனேரி பால்டன் அணிகள் வெற்றி : நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் அதிர்ச்சி தோல்வி

ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி ஜி.எம்.சி பாலயோகி உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று இரவு 8 மணிக்கு அரங்கேறும் முதலாவது அரையிறுதியில் புனேரி பால்டன் அணி, 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்சுடன் மோதியது.

author-image
WebDesk
New Update
Puneri Paltan vs Patna Pirates and Jaipur Pink Panthers vs Haryana Steelers semi finals  PKL Season 10 match updates in tamil

புரோ கபடி லீக் 2023 - 24: புனேரி பால்டன் அணி - பாட்னா பைரட்ஸ்; ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League: இந்திய மண்ணில் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 10-வது புரோ கபடி லீக் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில், பங்கேற்ற 12 அணிகள் தங்களுக்குள் தலா இரு முறை மோதின. லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடித்த புனேரி பால்டன், நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் நேரடியாக அரையிறுதிசுற்றை எட்டியது.

Advertisment

3 முதல் 6-வது இடத்தை பெற்ற அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் சந்தித்தன. இதில் பாட்னா பைரட்ஸ், தபாங் டெல்லியையும், அரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஜெயன்ட்சையும் வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறின.

இந்த நிலையில், இந்த அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற உள்ளன. தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி ஜி.எம்.சி பாலயோகி உள்விளையாட்டு அரங்கத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற  முதலாவது அரையிறுதியில் புனேரி பால்டன் அணி, 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்சுடன் மோதியது. 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், புனேரி பால்டன் அணி 37-21 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியனான பாட்னா பைரட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இதனைத் தொடர்ந்து, இரவு 9 மணிக்கு நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, அரியானா ஸ்டீலர்சை எதிர்கொண்டர். பரபரப்பான இந்த போட்டியில், அரியானா ஸ்டீலர்ஸ அணி 31-27 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment