Advertisment

Pro Kabaddi: புனேரி பல்டான் அசத்தல் வெற்றி : பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது

புரோ கபடியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் புனேரி பால்டன் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

author-image
WebDesk
New Update
Puneri Paltan vs Patna Pirates Match 42 of PKL Season 10 updates in tamil

புரோ கபடி லீக் 2023: புனேரி பால்டன் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் இன்று மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro-kabaddi-league 2023: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. 

Advertisment

இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரே ஒரு லீக் ஆட்டம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு தொடங்கும் அந்த ஆட்டத்தில் புனேரி பால்டன் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. 

புனேரி பல்டன் vs பாட்னா பைரேட்ஸ்

நடப்பு சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள  புனேரி பால்டன் அணி 5 வெற்றி, ஒரு தோல்வி என 26 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம், 6 போட்டிகளில் ஆடியுள்ள பாட்னா பைரேட்ஸ் 3 வெற்றி, 3 தோல்வி 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. 

புனேரி பல்டன் டிசம்பர் 20 அன்று பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிராக 43-18 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். பாட்னா பைரேட்ஸ் தனது கடைசி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக டிசம்பர் 22 அன்று 46-33 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. வெற்றி உத்வேகத்தில் களமிறங்கும் இந்த இரு அணிகள் மோதிய ஆட்டம் இரவு 9 மணிக்கு தொடங்கியது. 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 46-28 என்ற புள்ளி கணக்கில், புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 7 போட்டிகளில் 6 வெற்றி பெற்றுள்ள புனேரி பால்டன் அணி 31 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

நேருக்கு நேர் 

பி.கே.எல் வரலாற்றில் புனேரி பால்டன் அணி 19 முறை பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொண்டுள்ளது. இதில், 13 வெற்றிகளுடன் பாட்னா பைரேட்ஸ் முன்னிலையில் உள்ளது. அதே சமயம் புனேரி பல்டான் 3 முறை வென்றுள்ளது. 3 போட்டிகள் டையில் முடிந்தது.

முந்திய சீசனில் புனேரி பல்டானுக்கும் பாட்னா பைரேட்ஸ் அணிக்கும் இடையேயான போட்டியில் 44-30 என புனேரி பல்டான் அணி வெற்றி பெற்றது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment