தமிழ் தலைவாஸ் கனவு தகர்ந்தது; அரை இறுதியில் போராடி தோல்வி

மும்பையில் இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கும் 2-வது அரைஇறுதியில் தமிழ் தலைவாஸ் – புனேரி பால்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Puneri Paltan Vs Tamil Thalaivas, 2nd SemiFinal Match PKL9 2022 updates in tamil
Puneri Paltan Vs Tamil Thalaivas, 2nd SemiFinal Match PKL9 2022 Updates Tamil News

Pro Kabaddi 2022, 2nd SemiFinal Match Tamil Thalaivas vs Puneri Paltan Tamil News: 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்று முன்தினம் இந்த தொடருக்கான நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக அரங்கேறியது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்ட தமிழ் தலைவாஸ் அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் புனேரி பால்டன் அணியிடம் போராடி தோல்வி அடைந்தது.

இந்நிலையில், 9-வது புரோ கபடி லீக் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. மும்பையில் நடைபெற்ற அரையிறுதி போட்டிகளில் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதியது. 2-வது அரைஇறுதியில் அஜிங்யா பவார் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, பாசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனும் மோதியது.

புனேரி பால்டன் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்ததன் மூலமாக நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மறுபுறம், உ.பி. யோத்தாசுக்கு எதிரான நாக்-அவுட் சுற்றில் டைபிரேக்கர் வரை போராடி வெற்றி பெற்று முதல்முறையாக அரையிறுதிக்கு நுழைந்துள்ளது தமிழ் தலைவாஸ்.

தமிழ் தலைவாஸ் – புனேரி பால்டன் அணிகள் மோதிய இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் ஆட்டம் தொடங்கியது முதலே தமிழ் தலைவாஸ் அணி முன்னிலை வகித்து வந்தது. ஒரு கட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 22 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 16 புள்ளிகளும் பெற்றிருந்தன. ஆனால், அதற்குப் பிறகு, ஆக்ரோஷமாக விளையாடி புள்ளிகளைக் குவித்தனர். ஆட்டம் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது இரு அணிகளும் தலா 30 புள்ளிகளைப் பெற்றது. ஆனாலும், புனேரி பால்டன் அணி ஆட்டத்தின் முடிவில் 39 புள்ளிகளை எடுத்தது. தமிழ் தலைவாஸ் அணி 37 புள்ளிகளை எடுத்து 2 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இறுதிப் போட்டிக்கு சென்று கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த தமிழ் தலைவாஸ் அணியின் கனவு தகர்ந்தது. புனேரி பால்டன் அணி இறுதிப் போட்டிக்கு சென்றது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Puneri paltan vs tamil thalaivas 2nd semifinal match pkl9 2022 updates in tamil

Exit mobile version