Advertisment

தமிழ் தலைவாஸை வீழ்த்தி புனேரி பல்டன் வெற்றி; ஹரியானா ஸ்டீலர்ஸ் இடம் பெங்கால் வாரியர்ஸ் தோல்வி!

விளையாட்டு: புரோ கபடி லீக் தொடரில், மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில், தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி புனேரி பல்டன் அணி பரபரப்பு வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
Puneri Paltan vs Tamil Thalaivas and Bengal Warriors vs Haryana Steelers Pro Kabaddi League Season 10 match updates in tamil  

புரோ கபடி லீக் 2023 - 2024: புனேரி பல்டன் - தமிழ் தலைவாஸ்; பெங்கால் வாரியர்ஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League | Tamil Thalaivas: 10-வது புரோ கபடி லீக் தொடரில் மும்பையில் நடைபெற்ற தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்டன் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், புனேரி பல்டன் பரபரப்பு வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், பெங்கால் வாரியஸ் அணியை வீழ்த்தி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றது.

Advertisment

10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. 

இந்நிலையில், இந்த தொடரில் ஞாயிற்றுக்கிழமை 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.. மும்பையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - புனேரி பல்டன் அணிகள் மோதியது. இரண்டாவது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - ஹரியானா ஸ்டீரலர்ஸ் அணிகள் மோதியது.

முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - புனேரி பல்டன் அணிகள் கடுமையாக மோதியது. ஆட்ட நேர முடிவில், புனேரி பல்டன் அணி 29-26 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இதையடுத்து, நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 41-35 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Thalaivas Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment