Puneri Paltan vs Tamil Thalaivas Live Streaming Tamil News: 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்று முன்தினம் இந்த தொடருக்கான நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக அரங்கேறியது. இந்த நிலையில், இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடக்கவுள்ளன. இந்த ஆட்டங்களிலும் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில், மும்பையில் இன்று (வியாழக்கிழமை) இரண்டு அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. இதில், இரவு 7.30 மணிக்கு நடக்கும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 8.30 மணிக்கு நடக்கும் 2-வது அரைஇறுதியில் அஜிங்யா பவார் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, பாசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொள்கிறது.
இதையும் படியுங்கள்: லீக் சுற்றுகளில் டஃப் ஃபைட் கொடுத்த புனேரி பல்தான்: இன்று தமிழ் தலைவாஸ் வீழ்த்துமா?
புனேரி பால்டன் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்ததன் மூலமாக நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மறுபுறம், உ.பி. யோத்தாசுக்கு எதிரான நாக்-அவுட் சுற்றில் டைபிரேக்கர் வரை போராடி வெற்றி பெற்று முதல்முறையாக அரையிறுதிக்கு நுழைந்துள்ளது தமிழ் தலைவாஸ். இதிலும் அந்த அணி மிரட்டி எடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
Let’s show the world what we are made of!#PUNvCHE | #IdhuNammaTeam | #GiveItAllMachi | #FantasticPanga pic.twitter.com/xF4NGycUy2
— Tamil Thalaivas (@tamilthalaivas) December 15, 2022
புனேரி பால்டன் vs தமிழ் தலைவாஸ்: போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
புனேரி பல்டான் மற்றும் தமிழ் தலைவாஸ் இடையேயான பிகேஎல் 2022-23 அரையிறுதிப் போட்டி எந்த தேதியில் நடைபெறும்?
புனேரி பல்டன் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி டிசம்பர் 15, வியாழன் அன்று நடைபெறும்.
இதையும் படியுங்கள்: மெஸ்ஸி vs எம்பாப்பே: கோல்டன் பூட்சுக்கு போட்டா போட்டி… யாருக்கு வாய்ப்பு அதிகம்?
புனேரி பல்டான் மற்றும் தமிழ் தலைவாஸ் இடையேயான பிகேஎல் 2022-23 அரையிறுதிப் போட்டி எங்கு நடைபெறும்?
புனேரி பல்டான் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி மும்பை சர்தார் வல்லபாய் படேல் உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
புனேரி பல்டான் மற்றும் தமிழ் தலைவாஸ் இடையேயான பிகேஎல் 2022-23 அரையிறுதிப் போட்டி எந்த நேரத்தில் தொடங்கும்?
புனேரி பல்டான் மற்றும் தமிழ் தலைவாஸ் இடையேயான அரையிறுதிப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8:30 மணிக்கு தொடங்குகிறது.
புனேரி பல்டான் மற்றும் தமிழ் தலைவாஸ் இடையேயான பிகேஎல் 2022-23 அரையிறுதிப் போட்டியை எந்த டிவி சேனல்கள் ஒளிபரப்பும்?
புனேரி பல்டான் மற்றும் தமிழ் தலைவாஸ் இடையேயான அரையிறுதிப் போட்டியை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும்.
புனேரி பல்டான் மற்றும் தமிழ் தலைவாஸ் இடையேயான பிகேஎல் 2022-23 அரையிறுதிப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை நான் எப்படி பார்ப்பது?
புனேரி பல்டான் மற்றும் தமிழ் தலைவாஸ் இடையேயான அரையிறுதிப் போட்டி டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இதையும் படியுங்கள்: ‘தவறுகளை திரும்பிப் பார்க்காதே..!’ அஷன்- நரேந்தர்- பவார் கூட்டணி வெற்றி மந்திரம் இதுதான்!
புனேரி பல்டன் vs தமிழ் தலைவாஸ்: உத்தேச செவன்ஸ்
புனேரி பால்டன்:
ஆகாஷ் ஷிண்டே, ஃபசல் அட்ராச்சலி, பங்கஜ் மோஹிதே, எஸ்மாயில் நபிபக்ஷ், ஆதித்யா ஷிண்டே, அபினேஷ் நடராஜன், சங்கேத் சாவந்த்.
தமிழ் தலைவாஸ்:
நரேந்தர் ஹோஷியார், அஜிங்க்யா பவார், மோஹித், ஹிமான்ஷு, எம். அபிஷேக், அர்பித் சரோஹா, ஆஷிஷ்.
இதையும் படியுங்கள்: சாம்பியன் வீரர் இருந்தும் அவங்க ஜெயிக்கல… பவன் ஷெராவத் இல்லாமலே இவங்க அடிச்சாச்சு..! மறக்க முடியாத தமிழ் தலைவாஸ் வெற்றி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil