Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இந்நிலையில், இந்த தொடரின் லீக் சுற்றின் கடைசி நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தௌ தேவி லால் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. புரோ கபடி லீக் சுற்றில் புதன்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதியது.
இந்த போட்டியில், புனேரி பால்டன் - உ.பி.யோத்தாஸ் அணிகள் ஆரம்பத்தில் இருந்தே புள்ளிகள் எடுப்பதில் போட்டி போட்டுக்கொண்டு துரத்தி வந்தன. ஆனால், ஆட்ட நேர இறுதியில், புனேரி பால்டன் 40 புள்ளிகளும் உ.பி.யோத்தாஸ் அணி 38 புள்ளிகளும் எடுத்திருந்தன. இதனால், உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி பெற்றது.
.இதைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதியது.
இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு புல்ஸ் அணி, புள்ளிகள் எடுப்பதில் முன்னிலையிலேயே இருந்து வந்தது.
ஆட்ட நேர முடிவில், அரியான ஸ்டீர்லர்ஸ் அணி 39 புள்ளிகளையும் பெங்களூரு புல்ஸ் அணி 53 புள்ளிகளையும் எடுத்திருந்தனர். இதன் மூலம், அரியான ஸ்டீர்லர்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“