பஞ்சாப் அணி ஷ்ரேயஸ் ஐயரை ரூ. 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் டைட்டில் வெல்வதற்கு ஷ்ரேயஸ் ஐயர் முக்கிய பங்கு வகித்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL Auction 2025: Shreyas Iyer becomes second-most most expensive player in IPL history, sold for Rs 26.75 crore to Punjab Kings
முன்னதாக ஷ்ரேயஸ் ஐயரை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா, டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே போட்டி நிலவியது.
காயம் காரணமாக 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடாத போதிலும், அதன் பின்னர் களம் கண்ட ஷ்ரேயஸ் ஐயர்
14 போட்டிகளில் 351 ரன்கள் குவித்து கொல்கத்தா அணியை பட்டம் வெல்ல வைத்தார். 29 வயதான ஷ்ரேயஸ் ஐயர் துலிப் மற்றும் ரஞ்சி கோப்பைகள் மூலம் கிரிக்கெட்டிற்குள் நுழைந்தார். அப்போது, 3 போட்டிகளில் முதல் பந்தில் ஆட்டமிழந்த ஷ்ரேயஸ் ஐயர், அதைத் தொடர்ந்து ரஞ்சி போட்டிகளில் தொடர் சதமடித்தார். ஒடிசாவுக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 233 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷ்ரேயஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் சதம் அடிக்கவில்லை என்றாலும், சையத் முஷ்டாக் அலி டிராபியில் மூன்று சதங்களை அடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 115 போட்டிகளில் விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர், 3172 ரன்கள் அடித்துள்ளார். 2015-ஆம் ஆண்டு முதன் முறையாக டெல்லி அணிக்காக களம் இறங்கினார் ஷ்ரேயஸ் ஐயர். அப்போது எமர்ஜிங் பிளேயருக்கான விருதை அவர் பெற்றார். அதன் பின்னர், 2022-ஆம் ஆண்டில் கொல்கத்தா அணிக்கு ஷ்ரேயஸ் சென்றார். மேலும், அந்த அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று வழிநடத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“