2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
டோக்கியோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பி.வி.சிந்து சீனாவின் ஹீ பிங்ஜியாவோவை வென்றார். சிந்து இந்த போட்டியில் சீன வீராங்கனையை 21-13, 21-15 என்ற செட் கணக்கில் வென்றார். சிந்துவின் இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம் இதுவாகும்.
2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில், சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். கரோலினா மரினை இறுதிப்போட்டியில் எதிர்கொண்ட சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் ஒலிம்பியன் மற்றும் மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்குப் பிறகு இரண்டு பதக்கங்களை வென்ற இரண்டாவது இந்திய ஒலிம்பிக் வீரராக உள்ளார் பி.வி.சிந்து.
சிந்துவுக்கு, இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நல்ல விதத்திலே அமைந்தது. தாய் சூ-யிங்-யிடம் அரையிறுதி போட்டியின் தோல்வியைத் தவிர, எல்லா போட்டிகளிலும் அனைத்து செட்களில் சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
குழு J போட்டிகளில், சிந்து, இஸ்ரேலின் Ksenia Polikarpov 21-7,21-10, Cheung Ngan Yi 21-9,21-16 மற்றும் 16 வது சுற்றில் டென்மார்க்கின் Mia Blichfeldt ஐ 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வென்றார். காலிறுதியில் 56 நிமிடங்கள் நீடித்த பரப்பபான போட்டியில் 21-13, 22-20 என்ற செட் கணக்கில் சிந்து, அகனே யமகுச்சியை வென்றார்.
அரையிறுதியில் சிந்துவை தோற்கடித்த சீன தைபேயின் தாய் சூ-யிங், இறுதிப் போட்டியில் இப்போது மற்றொரு சீன சென் யூஃபியை எதிர்கொள்கிறார்.
டோக்கியோ ஒலிம்பிக் 2020 இல் இந்தியாவுக்கு மூன்றாவது உறுதியான பதக்கம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் சிந்து இந்தியாவின் இரண்டாவது பதக்கத்தை வென்றார், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு விளையாட்டுப் போட்டியின் முதல் அதிகாரப்பூர்வ நாளான ஜூலை 24 அன்று பெண்கள் 49 கிலோ பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கத்துடன் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றார். ஒட்டுமொத்தமாக 202 கிலோ எடையை உயர்த்திய மீராபாய் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஒலிம்பிக்கில் மொத்தம் 210 கிலோவுடன் சாதனை படைத்த சீனாவின் ஹூ ஜிஹுய் தங்கம் வென்றார். குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதிக்கு முன்னேறுவதன் மூலம் இந்தியாவுக்கு மூன்றாவது உறுதியான பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil