பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக முன்னேறி, சாதனைப் படைத்துள்ளார்.
பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் சுவிட்சர்லாந்து மான்சென்ஸ்டீன் நகரில் நடைப்பெற்று வருகின்றது. இதில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் சென் யூ ஃபீ-வை எதிர் கொண்டார்.
தொடக்கம் முதலே இந்திய வீராங்கனை சிந்து சிறப்பாக செயல்பட்டு புள்ளிகளை பெற்றார். மொத்தம் 40 நிமிடங்கள் பரபரப்பாக நீடித்த ஆட்டத்தின் முடிவில் சீன வீராங்கனை சென் யூ ஃபீ-வை 21-7, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி. சிந்து வெற்றி பெற்றார்.
Hat-trick of finals! ????@Pvsindhu1 maintains her perfect record against Chinese shuttlers at #BWFWorldChampionships to dismiss WR 3 #ChenYufei 2⃣1⃣-7⃣, 2⃣1⃣-1⃣4⃣ to advance to the final for the 3rd year in a row!
One win away from the #GOLD! ????#IndiaontheRise #Sindhu pic.twitter.com/kaCbkpECst
— BAI Media (@BAI_Media) August 24, 2019
இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு பி.வி.சிந்து தகுதி பெற்றார்.
முன்னதாக 2017, 2018 பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பிவி சிந்து இறுதிப் போட்டியில் முறையே நஜோமி ஒகுஹாரா மற்றும் கரோலினா மரின் ஆகியோரிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.