Advertisment

PV Sindhu vs Tai Tzu Ying Final Match: வெள்ளிப்பதக்கம் வென்றார் பி.வி.சிந்து!

PV Sindhu vs Tai Tzu Ying Badminton Final Match: பிவி சிந்து, சீன வீராங்கனை டய் சூ யிங்குடன் மோதுகிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PV Sindhu vs Tai Tzu Ying Badminton Match

PV Sindhu vs Tai Tzu Ying Badminton Match

PV Sindhu vs Tai Tzu Ying Badminton Final Match: 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி இந்தோனேசியாவில் தொடங்கியது. செப்டம்பர் 2ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலும், தெற்கு சுமத்ரா தலை நகர் பாலேம்பங்கிலும் இப்போட்டிகள் நடைபெறுகிறது. இந்தத் தொடரில், 15,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், நேபாளம், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், வங்கதேசம், பூட்டான், புரூனே, சீன தைபே, கிழக்கு தைமூர், ஹாங் காங், இந்தோனேஷியா, ஈரான், ஈராக், ஜோர்டான், கஜகஸ்தான், வடகொரியா, தென் கொரியா, கிர்கிஸ்தான், லாவோஸ், லெபனான், மக்காவு, மாலத்தீவுகள், மங்கோலியா, மியான்மார், ஓமன், பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ், கத்தார், சிரியா, தஜிகிஸ்தான், தாய்லாந்து, துருக்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வியட்நாம், ஏமன் உள்ளிட்ட நாடுகள் இந்த ஆசிய விளையாட்டுத் தொடரில் பங்கேற்றுள்ளன.

நீச்சல், வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், பேஸ்பால், கூடைப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிளிங், குதிரையேற்றம், வாள்வீச்சு, ஹாக்கி, கால்பந்து, கோல்ஃப் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று (ஆக.27) நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்கொண்டார். அதில், 21-17, 15-21, 21-10 என்ற செட் கணக்கில் சிந்து போராடி வெற்றிப் பெற்றார். இதைத் தொடர்ந்து, தற்போது இறுதிப் போட்டி தொடங்கியுள்ளது. இதில், பிவி சிந்து, சீன வீராங்கனை டய் சூ யிங்குடன் மோதுகிறார். அதன் லைவ் அப்டேட்ஸ் இதோ,

PV Sindhu vs Tai Tzu Ying Badminton Final Match Live Updates,

12:55 IST: 16-21 என்று இரண்டாவது செட்டையும் சூ யிங் கைப்பற்றினார். இதனால், 13-20, 16-21 என்று சூ யிங் தங்கப் பதக்கம் வென்றார். தோல்வியடைந்த சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

12:45 IST: இரண்டாவது செட்டிலும் சூ யிங்கின் Aggressive குறையவில்லை. 11-7 என்று சிந்து பின்னடைவு.

12:40 IST: முதல் செட்டை 13-20 என்று இழந்தார் சிந்து.

12:33 IST: 13-20 என சூ யிங் முன்னிலை. சிந்து 'Fails to collect it' என்று சொல்லலாம். அப்படியொரு அபாரமான ஆட்டம் சூ யிங்கிடம் இருந்து.

12:28 IST: 11-7 என  சூ யிங் முன்னிலை

12:26 IST: 9-5 என சூ யிங் முன்னிலை.

12:22 IST: உலகின் நம்பர்.1 பேட்மிண்டன் வீராங்கனையான சூ யிங் ஆரம்பத்திலேயே 5-0 என முன்னிலை.

12:18 IST: இரு வீராங்கனைகளும் போட்டிக்கு தயார்.

Asian Games Pv Sindhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment