இந்தியாவின் தங்க மங்கை பி.வி. சிந்து ‘காமன்வெல்த் விளையாட்டு 2022’-இல் பேமிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அவருக்கு பிரதமர் மோடி மற்றும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இந்தியாவின் ‘தங்க மங்கை’ பி.வி. சிந்து காமன்வெல்த் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்று நாட்டிற்கு மீண்டும் பெருமை சேர்த்துள்ளார். இந்திய வீராங்கனை பி.வி. சிந்து கனடாவின் மிச்செல் லியை 2-0 என்ற நேர் செட்களில் வென்றார். காமன்வெல்த் விளையாட்டில் பெட்மிண்டன் விளையாட்டில், தங்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
மிக முக்கியமான இறுதிப் போட்டியின் தொடக்க ஆட்டத்தை 21-15 என்ற புள்ளிக்கணக்கில் முடித்து பி.வி. சிந்து தனது வெற்றியை உறுதி செய்தார். காமன்வெல்த் இறுதிப் போட்டியில், பி.வி. சிந்து இந்த ஆட்டம் முழுவதையும் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவரது கனடா வீராங்கனை மிச்செல் லியால்ஒருபோதும் நெருக்கடி கொடுக்க முடியவில்லை.
இறுதிப் போட்டிக்கு பிறகு பேசிய பி.வி. சிந்து, “நான் நீண்ட காலமாக இந்த தங்கத்திற்காக காத்திருந்தேன். இறுதியாக எனக்கு தங்கம் கிடைத்தது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ரசிகர்களுக்கு நன்றி, அவர்கள் என்னை இன்று வெற்றிபெறச் செய்தனர்” என்று கூறினார்.
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ள பி.வி. சிந்துவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “பி.வி. சிந்து அற்புதமான சாம்பியன்களின் சாம்பியன்! அவருடைய திறமையை மீண்டும் மீண்டும் காட்டுகிறார். அவருடைய அர்ப்பணிப்பும் திறமையும் பிரமிக்க வைக்கிறது. காமன்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றதற்கு அவருக்கு வாழ்த்துகள். அவருடைய எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”