Advertisment

அஸ்வின் பவுலிங் ஆக்ஷனில் பிழை... சுட்டிக் காட்டிய முன்னாள் ஸ்பின்னருக்கு போன் போட்ட அஸ்வின்!

முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் அஸ்வினின் பவுலிங் ஆக்ஷனில் பிழை இருப்பதாக சுட்டிக் காட்டினார்.

author-image
WebDesk
New Update
Ravichandran Ashwin

லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் தனது கருத்தை நியாயப்படுத்தும் வகையில் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து இருந்தார்.

Ravichandran-ashwin | indian-cricket-team | worldcup 2023: இந்திய கிரிக்கெட் அணியில் சுழல் மன்னனாக வலம் வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். இந்தியாவுக்கான டெஸ்ட் அணியில் மட்டும் இடம் பிடித்த அவர் ஐ.பி.எல் மூலம் கம்பேக்  கொடுத்து டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்தார். வருகிற 5ம் தேதி முதல் சொந்த மண்ணில் நடக்கும் ஒருநாள்  உலகக் கோப்பைக்கு அஸ்வின் போன்ற ஆஃப் ஸ்பின்னர் அவசியம் என பலரும் வலியுறுத்திய நிலையில், அவர் அணி நிர்வாகத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டார். 

Advertisment

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அவர் வாய்ப்பளிக்கப்பட்டது அவரும் சிறப்பாக செயல்பட்டார். இதனிடையே, இலங்கையில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் சுழற்பந்து ஆல்ரவுண்டரான அக்சர் படேல் காயமடைந்த நிலையில், உலகக் கோப்பை இந்திய அணியில் அவரது இடத்தை நிரப்ப அஸ்வினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தற்போது அவர் இந்திய அணி முகாமில் இணைந்து தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் அஸ்வினின் பவுலிங் ஆக்ஷனில் பிழை இருப்பதாக சுட்டிக் காட்டினார். அவர் விளையாடிய நாட்களில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக இருந்த சிவராமகிருஷ்ணன், அஸ்வினின் பவுலிங் ஆக்சன் எவ்வாறு ஒருசேர (ஒத்திசைவு) இல்லை என்பதை எடுத்துக்காட்டினார். மேலும், அவர் தனது கருத்தை நியாயப்படுத்தும் வகையில் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து இருந்தார்.

"இந்தப் படம் எஸ்.எம்.மில் வைரலாகியுள்ளது. படத்தைப் பெரிதாக்கி, அவரது பந்துவீச்சு அல்லாத கை மற்றும் மேல் உடல் ஆஃப்சைடு நோக்கித் திறந்திருப்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள். நீங்கள் அவரது கீழ் உடலைப் பார்த்தால் மூடியிருக்கும். இது ஒத்திசைவு குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது. ஆஷ் விரைவில் மாற்றியமைக்க வேண்டும். இது மிகவும் பயனுள்ளதாக இருக்க திருத்தவும்" என்று சிவராமகிருஷ்ணன் தனது எக்ஸ்  தளத்தில் பதிவிட்டார். இதனையடுத்து, அவரை பலரும் சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்தனர்.

இதற்கிடையில், அஸ்வினே சிவராமகிருஷ்ணனை போனில் அழைத்து பேசியுள்ளார். இதுதொடர்பாக சிவராமகிருஷ்ணன் தனது எக்ஸ்  தளத்தில், "ரவி அஸ்வின் தனது பந்துவீச்சு ஆக்சன் பற்றி விவாதிக்க சிறிது நேரத்திற்கு முன்பு என்னை அழைத்தார், அவர் என்னைப் போலவே ட்ரோல்களின் வன்மத்தால் அதிர்ச்சியடைந்தார். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் அவருடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் தெளிவுபடுத்தினார். குட் லக் அஸ்வின், எங்களை பெருமைப்படுத்துங்கள்" என்று தனது இரண்டாவது பதிவில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Indian Cricket Team Worldcup Ravichandran Ashwin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment