/indian-express-tamil/media/media_files/hzLxZ0SR2KFrl90HhiWn.jpg)
ரிங்கு சிங் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் 16, 9, 69 (39 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்) என மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார்.
Rinku Singh | Ravichandran Ashwin: இந்திய டி-20 அணியில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்தி வருகிறார் அதிரடி வீரர் ரிங்கு சிங். சமீபத்தில் முடிவடைந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமாடியிருந்த அவர் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஐ.பி.எல் போட்டிகளில் அவர் கொடுத்த ஃபினிஷிங் போலவே சர்வதேச கிரிக்கெட்டிலும் செயல்பட்டுள்ளார்.
ரிங்கு சிங் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் 16, 9, 69 (39 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்) என மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார். அறிமுகமாகி ஒரு வருடத்திற்குள், டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவுக்காக 6வது இடத்தைப் பிடித்துள்ளார் ரிங்கு. இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 89.00 சராசரி மற்றும் 176.23 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 356 ரன்கள் குவித்துள்ளார்.
இந்நிலையில், ரிங்கு சிங்கை 'இடது கை தோனி' என இந்திய அணியின் மூத்த வீரரான தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன்அஷ்வின் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அஷ்வின் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், "அவரை (ரிங்கு சிங்) இடது கை தோனி என்று அழைக்கலாம். தோனி மிகவும் பெரிய ஆள். இவ்வளவு ஆரம்பத்திலே ரிங்கு சிங்கை தோனியுடன் ஒப்பிட முடியாது. ஆனால், அவரது அமைதியான ஆட்டத்தைப் பற்றி நான் பேசுகிறேன்.
அவர் தொடர்ந்து உ.பி அணிக்காக ஏரளமான ரன்களை குவித்து இந்திய அணிக்குள் நுழைந்துள்ளார். அவர் பல ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்)அணியில் பெஞ்சில் இருந்தார்.
அவர் கே.கே.ஆரில் இருந்தபோது, பயிற்சியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், த்ரோடவுன்களில் அடித்த அனைத்து பந்துகளையும் சேகரித்து, பந்து வீச்சாளரிடம் திருப்பிக் கொடுத்தார் என்று பலரும் என்னிடம் கூறுவார்கள்.
அப்போதிருந்து, அவர் நீண்ட காலமாக கே.கே.ஆருடன் இருந்தார். உ.பி அணிக்காக கடின உழைப்பில் ஈடுபட்டார். தந்திரமான சூழ்நிலையிலிருந்து இந்திய அணிக்கு வருவதற்கு அல்லது ஒரு இன்னிங்ஸை முடிக்க அவர் எப்போதும் தயாராக இருக்கிறார் என்பதைக் காட்டினார்.
அணி முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது சேசிங் செய்தாலும் அவரது அமைதி மாறாது. இன்னிங்ஸின் கடைசி கட்டத்தில் அவரது அமைதியானது அணிக்கு போனஸ்" என்று அஷ்வின் கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: R Ashwin calls Rinku Singh a ‘left-handed MS Dhoni’
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.