Advertisment

ட்ரோல் செய்த பாகிஸ்தான் ரசிகரை நேசிக்க வைத்த அஸ்வின்: வைரல் பதிவு

அஸ்வினின் பதிலுக்கு கமெண்ட் செய்த அந்த பாகிஸ்தான் ரசிகர், "லவ் யூ, தங்கள் பதிலுக்கு நன்றி. நீங்கள் ஒரு நல்ல பந்து வீச்சாளர்." என்று பதிவிட்டு நெகிழ்ந்தார்.

author-image
WebDesk
New Update
R Ashwin Epic Reply To Pakistan Fan Trolling

அஸ்வின் உலகக் கோப்பை இந்திய அணியுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவர் குறித்து மிகவும் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

Ravichandran-ashwin: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய அக்சர் படேலுக்கு காயம் ஏற்பட்டது. அவர் தனது காயத்தில் இருந்து மீள இன்னும் சில வாரம் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இதன் காரணமாக அக்சர் படேல் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இருந்தும், சொந்த மண்ணில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகினார். அவரது இடத்தை நிரப்ப ஆஃப் ஸ்பின்னரான தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் உலகக் கோப்பை இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இதன்மூலம், 2011 உலகக் கோப்பை தொடரில் விளையாடிய வீரர்களில் விராட் கோலிக்குப் பிறகு 2023 உலகக் கோப்பையில் விளையாடும் 2வது வீரரானார் அஸ்வின்.  

அஸ்வின் உலகக் கோப்பை இந்திய அணியுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவர் குறித்து மிகவும் பரபரப்பாக பேசி வருகின்றனர். 

இந்நிலையில், இந்திய வீரரும் வர்ணனையாளருமான தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் தினேஷ் கார்த்திக் பதிவிட்டு இருந்தார். அந்தப் பதிவிற்கு பதிலளித்த அஸ்வின், "நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. எந்த ஐடியாவும் இல்லை" என்று பதிவிட்டார். 

அந்த பதிவுக்கு கமெண்ட் செய்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், "அந்த இரண்டு சிக்ஸர்களையும் ஷாகித் அப்ரிடி இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்" என்று பதிவிட்டார். அதற்கு பதிலளித்த அஸ்வின், "அவை இரண்டும் நல்ல ஷாட்கள். அவர் சிறந்த பால் ஸ்ட்ரைக்கர் என்பதை உண்மையிலேயே பாராட்டுகிறேன்" என்று பதிவிட்டார். 

அஸ்வினின் பதிலுக்கு கமெண்ட் செய்த அந்த பாகிஸ்தான் ரசிகர், "லவ் யூ, தங்கள் பதிலுக்கு நன்றி. நீங்கள் ஒரு நல்ல பந்து வீச்சாளர்." என்று பதிவிட்டு நெகிழ்ந்தார். பாகிஸ்தான் ரசிகரின் அந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்த சூழலில், கடைசி ஓவரில் ஷாகித் அப்ரிடி அஸ்வின் ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் விளாசி தனது அணியை வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Ravichandran Ashwin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment