ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டுடன் 17 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இந்த தொடரில் கடந்த 2023 ஆம் ஆண்டு இம்பேக்ட் பிளேயர் விதி அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒவ்வொரு அணிக்கும் பல வகைகளில் உதவியது. பேட்டிங் மற்றும் பவுலிங் வரிசையில் தங்களது அணியை சிறப்பாக கட்டமைக்க உதவியது.
ஆனால், சிலர் இந்த விதிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, இந்திய கேப்டன் ரோகித் சர்மா போன்றோர் இந்த விதி இந்தியாவில் ஆல்ரவுண்டர்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்று கூறியிருந்தார். மேலும், இம்பேக்ட் பிளேயர் விதிக்கு எதிராக குரல் கொடுத்த முதல் இந்திய முன்னணி வீரர் ரோகித் தான்.
அதேநேரத்தில், பல வீரர்கள் இந்த இம்பேக்ட் பிளேயர் விதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இந்த விதி பற்றி நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் பேசுகையில், "இம்பாக்ட் பிளேயர் விதியை எனக்கு பிடிக்கும். எனக்கு சிக்ஸர்களை பார்க்க பிடிக்கும், அதிக ரன்கள் குவிப்பதை பார்க்க பிடிக்கும், பந்து வீச்சாளர்களை அழுத்தம் அடைவதை பார்க்க விரும்புகிறேன். நீங்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் கிரிக்கெட் விளையாட்டின் அழகு." என்று அவர் கூறினார்.
அஸ்வின் விளக்கம்
இந்த நிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) நடைமுறையில் இருக்கும் இம்பேக்ட் பிளேயர் விதிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், இது அணிகள் "வியூகம்" அமைக்க உதவுகிறது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கிரிஸ் ஸ்ரீகாந்தின் யூடியூப் சேனலின் 'ஷோ சீக்கி சீக்காவில் அவர் பேசுகையில், "இம்பாக்ட் பிளேயர் விதி மிகவும் மோசமாக இல்லை என்று நான் ஏன் நினைக்கிறேன் என்றால், அது உத்திக்கு இன்னும் கொஞ்சம் மதிப்பு அளிக்கிறது. ஆல்ரவுண்டர்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்று பலர் கூறுகிறார்கள். ஆனால், ஆல்-ரவுண்டர்களை ஊக்குவிக்க உங்களை யாரும் தடுக்கவில்லை.
இந்த தலைமுறையில், பேட்ஸ்மேன்கள் பவுலிங் போடுவது என அவர்கள் அதைச் செய்வதில்லை. இம்பாக்ட் ப்ளேயர் விதியின் காரணமாக அவர்கள் சோர்வடைவது போல் இல்லை. வெங்கடேஷ் ஐயரைப் பாருங்கள், அவர் தற்போது லங்காஷயர் அணிக்காக சிறப்பாக ஆடுகிறார். எனவே, இந்த விதி என்பது புதுமைக்கான வாய்ப்பு உள்ளது. மேலும் இது போட்டியை சிறந்ததாக்குகிறது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்த 9 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்த பிறகு ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ஷாபாஸ் அகமதுவை ஒரு இம்பாக்ட் ப்ளேயராகக் கொண்டுவந்தது. அவர் 23 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டை கைப்பற்றி மேட்ச்-வின்னர் ஆக ஜொலித்தார். பனியால் ஆட்டங்களை ஒருதலைப்பட்சமாக மாற்றும் திறன் இருக்கும்போது, இரண்டாவதாக பந்துவீசும் அணிகளுக்கு கூடுதல் விருப்பம் கிடைக்கிறது.
நீங்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்கிறீர்கள் என்றால், ஒரு பேட்டருக்காக கூடுதல் பந்துவீச்சாளர்களை கொண்டு வந்து, தந்திரோபாயமாக மாற்றீடு செய்யலாம். கூடுதல் வீரர் விளையாடுவது மிகவும் இறுக்கமானது. கொல்கத்தா அல்லது மும்பையைத் தவிர, ஸ்கோர்கள் உயர்ந்தன, அவை கடுமையாக இல்லை. பஞ்சாப் கிங்ஸின் சொந்த மைதானம் முல்லன்பூர் போல் மற்ற இடங்களிலும் ஆட்டம் மாறின. அவை அனைத்தும் 160-170 ஆட்டங்களாக இருந்தன." என்று அஷ்வின் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.