Advertisment

60 ஓவரில் 600 ரன்கள் சேசிங்: 'ரொம்ப தூரம் போயிட்டோம்யா, இனிமே திரும்ப முடியாது': ஆண்டர்சனின் கருத்து அஸ்வின் பதில்

ஜேம்ஸ் ஆண்டர்சன் கருத்துக்கு பதிலளித்துள்ள இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், அவர்கள் தங்களது நம்பிக்கையுடன் வெகுதூரம் சென்றுவிட்டதாக உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
R Ashwin on James Anderson comments on chasing down 500 or 600 in 60 overs Tamil News

4-வது நாளில் 60 அல்லது 70 ஓவர்களில் 500 அல்லது 600 ரன்கள் என்ற எளிதில் துரத்தி பிடித்துவிடும் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் நம்பிக்கை தெரிவித்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Ravichandran Ashwin | James Anderson | India Vs England: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 

Advertisment

ஆண்டர்சன் கருத்து

இந்த தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்பிறகு, இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், இந்தப் போட்டியின் 4-வது நாளில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து ஆக்ரோஷமாக பேட்டிங் செய்யும் என்றும், தேவைப்பட்டால் 60 அல்லது 70 ஓவர்களில் 500 அல்லது 600 ரன்கள் என்ற எளிதில் துரத்தி பிடித்துவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 

எனினும், இங்கிலாந்து அணி 399 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்த முடியாமல் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி கண்டது. இதன் அபார வெற்றி மூலம் இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது.

அஸ்வின் பதில்

இந்நிலையில், ஜேம்ஸ் ஆண்டர்சன் கருத்துக்கு பதிலளித்துள்ள இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், அவர்கள் தங்களது நம்பிக்கையுடன் வெகுதூரம் சென்றுவிட்டதாக உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். 

அஸ்வின் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள சமீபத்திய வீடியோவில் இங்கிலாந்து அணிக்கு எதிரான பேஸ்பால் டெஸ்ட் தொடர் குறித்து விரிவாக பேசியுள்ளார். ஆண்டர்சன் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள அஸ்வின், "இங்கிலாந்து அணியினர் முதல் டெஸ்ட் போட்டியில் வென்றார்கள். சிறப்பாக விளையாடினீர்கள். எனது வாழ்த்துக்கள். 

பின்னர், விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் செய்தியாளர் சந்திப்புக்கு சென்றார். அங்கு அவர் 4வது நாளில் வெற்றி இலக்கு 500 அல்லது 600 ரன்களாக இருந்தாலும், அதை 60 ஓவர்களில் முடித்துவிடுவோம் என்று அவர் கூறினார். இது அவர்களின் நேர்மறையான மனநிலைக்கு ஒரு எடுத்துக்காட்டு. என்றாலும், 'ரொம்ப தூரம் போயிட்டோம்யா, இனிமே திரும்ப முடியாது' என்கிற சூழல் தான் அது. 

முதல் டெஸ்டுக்குப் பிறகு நான் புரிந்துகொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், பேஸ்பால் வெறும் ஆக்ரோஷமான கிரிக்கெட் அல்ல. அது டிஃபென்ஸ் இல்லாத கிரிக்கெட். அவர்கள் டிஃபென்ஸ் ஷாட்டை விளையாடப் போவதில்லை. அவர்கள் டிஃபென்ஸ் விளையாடினால் அவுட் ஆகி விடுவார்கள். எனக்கு என்ன ஆச்சரியமாக இருந்தது என்றால், ஜோ ரூட்டும் அவர்களின் விளையாட்டுத் திட்டத்தை ஒப்புக்கொண்டார். ஏனென்றால், உலக கிரிக்கெட்டின் டிஃபென்ஸ் தரவரிசையை நீங்கள் எடுத்துக் கொண்டால், சுழலுக்கு எதிராக அந்த பட்டியலில் ரூட் தான் நம்பர் 1 வீரராக இருப்பார். அவரும் அவர்களின் அணுகுமுறையை ஏற்றுக் கொண்டார்." என்று அவர் கூறினார்.  

இந்தியாவிடம் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்த பிறகு இங்கிலாந்தின் பேஸ்பால் டெம்ப்ளேட் ஆட்டம் மீது கடுமையான விமர்சங்கள் எழுந்துள்ளது. முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் மைக்கேல் வாகன் மற்றும் நாசர் ஹுசைன் ஆகியோர் இங்கிலாந்தின் இந்த அணுகுமுறைக்காக அணி நிர்வாகத்தை சாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Felt like they had gone too far: R Ashwin on James Anderson’s comments on chasing down 500 or 600 in 60 overs

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs England Ravichandran Ashwin James Anderson
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment