Advertisment

'பவுலர்களை யாராவது காப்பாற்றுங்கள் ப்ளீஸ்': அவசர உதவி போஸ்ட் போட்ட அஸ்வின்

கொல்கத்தாவுக்கு எதிராக 262 ரன்களை மிக எளிதாக சேசிங் செய்த பஞ்சாப் அணியை பார்த்து மிரண்டு போன இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், பவுலர்களை காப்பாற்றுமாறு அவசர கோரிக்கை வைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
R Ashwin Sends SOS On Behalf Of All As PBKS Chase Down Record 262 vs KKR Tamil News

ஐ.பி.எல். வரலாற்றில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற மாபெரும் சாதனையை பஞ்சாப் படைத்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

IPL 2024 | Kolkata Knight Riders | Punjab Kings | Ravichandran Ashwin: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று வெள்ளிக்கிழமைகொல்கத்தாவில் நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. 

Advertisment

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா சுனில் நரைன் மற்றும் பில் சால்ட்டின் அதிரடி அரைசதத்தின் மூலம் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து, 262 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது கொல்கத்தா பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கி 18.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 262 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தரப்பில் சதம் அடித்து மிரட்டிய தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 108 ரன்களையும், சஷாங்க் சிங் 68 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இதன் மூலம், ஐ.பி.எல். வரலாற்றில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற மாபெரும் சாதனையை பஞ்சாப் படைத்தது. அத்துடன், ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற தென் ஆப்பிரிக்காவின் சாதனையை முறியடித்து பஞ்சாப் புதிய உலக சாதனை படைத்தது.

அஸ்வின் பதிவு 

இந்த நிலையில், 262 ரன்களை மிக எளிதாக சேசிங் செய்த பஞ்சாப் அணியை பார்த்து மிரண்டு போன இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், பவுலர்களை காப்பாற்றுமாறு அவசர கோரிக்கை வைத்துள்ளார். ஏற்கனவே, இந்த சீசனில் ஐதராபாத் அணி 287 ரன்கள் அடித்ததை போல, பெரும்பாலான போட்டிகளில் அனைத்து அணிகளும் எளிதாக 200 - 250 ரன்கள் அடித்து வருகின்றன. எனவே இப்படியே போனால் பவுலர்களின் நிலை மோசமாகி விடும் என்று குறிப்பிடும் வகையில் அஸ்வின் பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில், "யாராவது பவுலர்களை காப்பாற்றுங்கள் ப்ளீஸ். 260+ ரன்கள் அடிக்கப்பட்ட போட்டியில் கடைசி 2 ஓவர்களில் பந்துகளுக்கு சமமான ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இது மூழ்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவு தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Punjab Kings Ravichandran Ashwin Kolkata Knight Riders IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment