ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள சூழலில், பெர்த் மைதானத்தில் தொடங்கி நடைபெறும் தொடக்கப் போட்டிக்கான இந்திய ஆடும் லெவன் அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் ரவிச்சந்திரன் இடம் பெற வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய அணியில் 3 இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும் நிலையில், அவர்களை சமாளிக்க அனுபவமிக்க ஆஃப்ஸ்பின்னரான அஸ்வினை களமிறக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Border Gavaskar Trophy: R Ashwin set for Perth Test selection in lone spinner role
பெர்த் மைதானம் புதிதாக கட்டப்பட்டுள்ள நிலையில், அங்கு தற்போதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் ஆடிய அணியே வென்றுள்ளது. தவிர, இங்குள்ள ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் 102 விக்கெட்டையும், சுழற்பந்து வீச்சாளர்கள் 37 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். அதிகபட்சமாக நேதன் லியோன் 27 விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். அதனால், இங்கு பவுன்ஸ், வேகம் மட்டும்மல்லாமல், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தான் அஸ்வினை ஆடும் லெவனில் சேர்க்க திட்டமிட்டுள்ளனர்.
தவிர, ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகிய இடது கை 3 பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அஸ்வின் இடது கை வீரர்களுக்கு எதிராக நல்ல சாதனை படைத்தவராகவும் இருக்கிறார். மேலும், கடந்த முறை ஸ்டீவ் ஸ்மித்தையும் அவர் தொந்தரவு செய்திருந்தார். ஆதலால், இந்திய அணி தனது பவுலிங் வரிசையில் 3 சீமர்கள், ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஒரு சுழற்பந்துவீச்சாளர் என கட்டமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்வின் தவிர, இடது கை ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் ஆஸ்திரேலியா செல்ல உள்ளனர். அஷ்வின்-ஜடேஜா ஆகிய இரு சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் விளையாடுவது இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. ஜடேஜாவின் சிறப்பான பேட்டிங் காரணமாக அஸ்வின் அடிக்கடி வெளியே உட்கார வேண்டி சூழல் நிலவி வருகிறது.
ஆனால் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையிலான புதிய அணி நிர்வாகம் மேட்ச்-அப்களை நம்புவதாக தெரிகிறது. சில வாரங்களுக்கு முன்பு இந்தியா நியூசிலாந்துடன் சொந்த மண்ணில் விளையாடியபோது, அவர்கள் வாஷிங்டனை தொடருக்கு இடையில், 2வது டெஸ்ட் போட்டியில் அழைத்துக் கொண்டனர். அவர் முதலில் தேர்வு செய்யப்படாத நிலையில், நியூசிலாந்து அணியின் இடது கைது பேட்ஸ்மேன்களை மனதில் கொண்டு அவரை அணிக்குள் கொண்டு வந்தனர்.
ஆஸ்திரேலிய மண்ணில் அஸ்வின், 10 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அவர் 42.15 சராசரியில் 39 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“