/tamil-ie/media/media_files/uploads/2017/11/z787.jpg)
இந்திய கிரிக்கெட்டின் ஒருநாள் மற்றும் டி20 அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்படுபவர் ரவிச்சந்திரன் அஷ்வின். அணியின் முன்னணி பந்துவீச்சாளரான அஷ்வின் கடைசியாக, இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரில் விளையாடினார். அதற்கு பிறகு நடந்த இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் அவர் சேர்க்கப்படவேயில்லை. இம்மாதம் இந்தியாவில் தொடங்கவுள்ள இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் அஷ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்று(நவ.12) அஷ்வின் தனது ஆறாவது திருமண ஆண்டை மனைவியுடன் கொண்டாடினார். இதுகுறித்த படம் ஒன்றையும் அஷ்வின் வெளியிட்டுள்ளார்.
அஷ்வின் தனது தோழியான ப்ரீத்தியை கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகிரா, அத்யம் என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று ஆறாவது திருமண நாளை கொண்டாடிய அஷ்வின், தனது மனைவிக்கு நன்றி தெரிவித்து, "நமக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. மிக வேகமாக நாட்கள் கடந்துவிட்டது. என் வாழ்க்கையின் சுக துக்கங்களில் பங்கெடுத்து கொள்வதற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
It's been 6 years since we got married @prithinarayanan and it's passed by so quickly, thanks for being there with me through thick and thin. pic.twitter.com/eEjPmWqYvA
— Ashwin Ravichandran (@ashwinravi99) 13 November 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.